பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 ஏழையரின் இன்மையும், செல்வரின் உடைமையும், கற்றறிந்தாரின் வறுமையும், கல்லாதார் கண்பட்ட திருவும் வாழ்க்கையில் எத்தகைய ஏற்றத் தாழ்வுகளை 25ம் வேதனையையும் ஏற்படுத்திவிடுகின்றன என்பதையும், இதனால் புலவர்கள்கூட, 'பஞ்சத்தில் பிள்ளை விற்பார் போலப் பிரபந்தம் விற்றலையும்"* நிலை ஏற்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டிய புலவர், கவிதை பாடும் வித்தைக்கு மட்டுமல்லாமல், எல்லா வித்தைக்குமே காரணம் பனம்தான் என்பதையும் தொட்டுக் காட்டு கிறார். செப்பிடு வித்தை, செலஸ்தம்பன வித்தை, தப்புவார் அக்கினி ஸ்தம்பன வித்தை,-ஓப்பிரை வேஷங்கள் போடும் வினோத வித்தை, ஆத்மவதை தோஷங்கள் எண்ணாத சூன்ய வித்தை-பூஷ ர மாய்க் கூத்தாடிக் கேற்ற கொடிய வித்தை, சொன்னபடி ஆஸ்தானத்தே குரங்கை ஆட்டுவித்தை ரத்தரியே தாருட வித்தையும் நீ கற்பித்த வித்தையல்லால் ஆருடைய வித்தை சொல்வாய், அப்பனே? என்று பணத்தை நோக்கிக் கேட்டு விடுகிறார். இத்தகைய வித்தைகளைத் தவிர, தூரா தொலைப் பட்டணங்களுக்கும் தீவாந்தர, தேசாந்தரங்களுக்கும் கடல் மார்க்கமாகவும், தரைமார்க்கமாகவும், பல்வேறு ஆபத்துக்களையும் கடந்து வாணிபம் செய்ய முற்படுவதும், மேலும் குறுக்கு வழி யிலே குபேரனாக எண்ணி, இரும்பைப் பொன்னாக்கவும், ஈயத்தை இரும்பாக்கவும் உதவுகின்ற ரசவாத வித்தை கைவரப்பெற வேண்டுமென்று விரும்புவதும், அதன் காரணமாக, கைமுதலையும் கரைத்துப் பறிகொடுத்துத் திண்டாடி நிற்பதுமான பேராசைகளையும் அவர் சாங்கோபாங்கமாகவும் நயமாகவும் சுட்டிக் காட்டுகிறார். காட்டிவிட்டு,