பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 35
 

என்றார். இங்ஙணம் வழிவழியாக அவலங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணம். சமூகமும் ஆட்சியும்தான் என்று நூறாயிரம் தடவை சொல்லியும் என்ன நடந்திருக்கிறது?

இன்று நமது நாட்டில் 77 விழுக்காட்டு மக்கள் எழுத்தறிவில்லாதவர்கள். 58.9 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இந்த இழிநிலை என்று மாறும்? இந்நிலையை “கனவோ நனவோ” என்ற கதையில் சக்திப் பெருமாள் விவரிப்பதைக் கேளுங்கள்.

“வாய் திறக்க வழியின்றி அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன், ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்” என்று என்னையறியாமலேயே என் வாய் முணுமுணுத்தது. பாரதியின் உள்ளக் குமுறல் - குருதிக் கொதிப்பு இப்படி எத்தனை காட்சிகளைக் கண்டதோ? தனியொருவன்கூட உணவின்றி நலியாத சமுதாயம் என்றுதான் உருவாகுமோ? கனல் தெறிக்கப் பறந்த அவனது வார்த்தைகள் இவ்வுலகை புடமிட்டுப் பொன்னாக்காதோ? அவனது கனவு நனவாகும் நாள் எந்நாளோ? எழுந்த வினாக்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் உள்ளத்தையே புதைத்து விட்டன.”

(வெள்ளையங்கி பக்.96)

என்கிறார் சக்திப் பெருமாள்.

இத்தனை பேர் எச்சரித்த பிறகு, ஏன் சமூகத்தில் இந்த அவலம் தொடர்கதையாக இருக்கிறது? சமூக நீதி ஏன் உருவாகவில்லை? ஆசைதான் காரணம். அப்பட்டமான - நிர்வாணத் தன்மையுடைய- தன்னலம் சார்ந்த ஆசை, நீதியை, சமூக நீதியை பலி கொடுத்து செல்வத்தைக் குவிக்கத் துணை செய்கிறது. இந்தக்