பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 69

இன்றைய கல்விமுறையில் இளைஞர்கள் ஆளுமையையும் படைப்பாற்றலையும் பெறுதற்குரிய கூறுகள் இல்லை! ஏன்? இன்றைய இளைஞர்கள் ஆபத்துக்களையும் பொறுப்புக்களையும் ஏற்க அஞ்சுகின்றனர். எல்லாம் நல்லவிதமாக, சுகம் தரக்கூடியதாக அமைய, வேண்டும் என்று விரும்புகின்றனர்,

இன்றைய இளைஞர்கள் கடின உழைப்பைப் பற்றிக் கனவிலும்கூட எண்ணுவதில்லை. ஏன் தாய் மொழியாகிய தமிழில் கூட இன்றைய இளைஞர்களுக்கு விருப்பம் இல்லை.

வீட்டு மொழியை கற்பதை விட்டுவிட்டு வேறு வேறு மொழிகளையெல்லாம் கற்கும் இழிநிலையை எண்ணி எண்ணிப் பொருமுகிறான் பாரதி.

தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்த வரலாற்றின் சிறப்புக்களையும் அந்த சிறப்புக்கு காரணமாக இருந்த பெரியோர்களின் வரலாறுகளையும் ஞானிகள், மகான்களைப் பற்றியும் கல்வி நிலையங்களில் போதிக்க வேண்டும் .

இன்றைய கல்வியில், பகுத்தறிவு என்ற பெயரில் தாயுமானார் அருளிச் செய்த கவிதைகளை நமது கல்லூரி மாணவர்கள் கற்கும் வாய்ப்புப் பெறவில்லையே என்று கவலைப்படுகிறான் பாரதி!

அதுமட்டுமல்ல, ஒரு தவறான - பைத்தியக்காரத் தனமான கருத்தும் இளைஞர்களிடம் பரப்பப்படுகிறது. அதாவது, யாக்ஞவல்யர். சங்கரர் முதலிய அவதார புருஷர்களைப் பற்றியும் அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மகாவீரர்களைப் பற்றியும்.