உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இன்றைய இளைஞர்கள் கேள்விப்பட்டது கூட இல்லை!

ஒரோ வழி கேள்விப்பட்டாலும் அவர்கள் நவீன காலத்து, புதுமைகளைப் பற்றி அறியாதவர்கள் என்று கருதி அலட்சியப்படுத்துகிறார்கள். பழங்காலத்துப் பெரியவர்கள் அந்தக் காலத்தில் கண்ட கடுமையான செய்திகளின் அடிப்படையில்தான் பின்னைப் புதுமைகள் தோன்றி வளர்ந்து வருகின்றன என்பதை மறுத்தல் இயலாது.

பாரதி, பாரத ஜாதியினர் ஆண்மையுடன் விளங்க வேண்டும் என வற்புறுத்துகிறான். புதிய ஆத்திசூடியில் “அச்சம் தவிர்” என்றும் “ஆண்மை தவறேல்” என்றும் அருளியுள்ள உபதேசங்கள் என்றைக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்துவன.

அச்சம் நீங்கினாலே ஆண்மை விளங்கும். பயம், மிகப்பெரிய தீமை. உலக மாந்தரைப் பயத்திலிருந்து மீட்பதே முதற்கடமை. நமது நாடு புகழ்பூத்து விளங்கிய காலம் ஒன்று இருந்தது. இந்திய நாடு அடிக்கடி ஏற்பட்ட அந்நியர்களின் படையெடுப்புகளோடு போராடி, போராடிக் களைப்படைந்து விட்டது.

அதுமட்டுமா? கல்வி, கலை முதலிய சாஸ்திரங்களை இழந்து நாளுக்கு நாள் பின்னடைவு பெற்று வருகிறது. மேலும், நமது மக்களிடத்தில் வீரியமும் தைரியமும் தர்ம குணமும் பிரம்ம ஞானமும் போய், அவர்கள் பொறாமை, வயிற்றெரிச்சல் முதலிய அற்ப குணங்களுக்கு இரையாகி இழிநிலையை அடைந்துவிட்டனர்.