பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்சள் 口 75

இந்திரிய போகம்; சுகம். மற்றொன்று வறுமை. இவ்விரண்டுமே இல்லாமல் சமரச நிலைக்கு மக்கள் வந்தால் ஆத்ம ஞானத்தை ஏற்பார்கள்.

இந்நிலைக்கு ஜனங்களைக் கொண்டு வருவது மடாதிபதிகளின் கடமை. ஒவ்வொரு மடாதிபதியும் இக்கடமையை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

நமது நாட்டில் கொடிய தரித்திரத்தால் வருந்துகிறவர்கள் ஏராளம்! ஏழைகளுக்கு எவ்வாறு உதவி செய்வது? வறுமையிலிருந்தும் பயத்திலிருந்தும் எப்படி மீட்பது?

மடாதிபதிகள் அன்னதானம்; செய்வதனால் வறுமை நீங்கிவிடாது. தரித்திரம் நிலையான ஏற்பாடுகளாலேயே அகலும். நிலையான ஏற்பாடு என்ன? ஒரே ஒரு வழிதான் உண்டு. ஜனங்களிடம் தொழில் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும்.

குருடனுக்கு கோல் பிடித்துவிடுவது என்றால் ஆயும் காலம் முழுதும் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாகக் கண்ணைத் திறந்துவிடுதல் மேலான உதவி. இதையே வேறு மொழியில் “நாள்தோறும் மீன் தருதலைவிட மீனைப் பிடிக்கக் கற்றுத் தருவதே மேல்” என்று கூறுவர்.

“மடாதிபதிகள் மடத்தின் மூலதனத்தில் ஒரு பகுதியைக் கொண்டும், பாதகாணிக்கையைக் கொண்டும் முதல் சேர்த்துத் தொழிற்சாலைகள் ஏற்படுத்தலாம். இதனால் மக்கள் பயனுறுவர். மடங்களின் நிதியும் அபிவிருத்தி அடையும். தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள கப்பற்