பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

சமுத்திரக் கதைகள்


86 சமுத்திரக் கதைகள்

நிற்கட்டும். நாளைக்கு திருப்பதிக்கு போயிட்டு வந்த பிறகு, இங்கே

வா... என்னை மட்டும் பாரு... சரியா...?

“அய்யா அடிக்கக்கூடாது... முதலாளிக்கு மட்டும் ஒரே ஒரு டெலிபோன் போட்டு பேசிடுங்க...”

“நான் டெலிபோன் செய்யுற அளவுக்கு உன் முதலாளி பெரிய மனுஷன் இல்லடா... அவனை, எனக்கு நல்லாவே தெரியும். நான் சொன்னேன்னு சொல்லு... உன்மேல சந்தேகம் வந்தால், அவனை எனக்கு டெலிபோன் செய்யச் சொல்லு... ஏண்டா யோசிக்கே...? ஒண்ணு உள்ளே போ... இல்லன்னா வெளியே போ...”

வெளியே போகப்போன வேன்காரனை, அதே அடிதடிக் காவலர் இழுத்துப் பிடித்தார். இருவரும் பிராணச் சிநேகிதர்களாய் ஒரு மூலைப் பக்கமாகப் போனார்கள். அவர்கள் போவது வரைக்கும் பொறுமை காத்த சாமிநாதன், டெலிபோனை சுழற்றினான்.

அம்மாவா..! அய்யா வேண்டாம் உங்க கூடத்தான் பேசணும். நம்ம டாக்டர் தம்பி... திருப்பதி போறதுக்கு ஏ.சி. வண்டி வேணுமுன்னு கேட்டதா சொன்னிங்க இல்ல...? தம்பிகிட்ட சொல்லி டுங்க. நாளைக்கு காலையில சரியா ஆறுமணிக்கு ஒரு சுமோ உங்க வீட்டு முன்னால வந்து நிற்கும். ஒரு பைசாகூட கொடுக்கவேண்டாம். என்னதும்மா...? மாசம் பிறந்து நாலு நாளு ஆயிட்டுதேன்னு அய்யா என்னை விசாரிச்சாரா...? இதோ வந்துக்கிட்டே இருக்கேம்மா...”

எல் அண்ட் ஒ பெருமாளுக்கு, ஒரு தர்ம சங்கடம். அன்றைக்குப் பார்த்து அந்தப் பகுதியில் ஒரு சாதி ஊர்வலம். இந்த சாமிநாதன் போட்டுக் கொடுத்ததாலோ என்னவோ, அசோகச் சக்கர அதிகாரி, கூடுதல் போலீஸ்காரர்களை அனுப்ப மறுத்துவிட்டார். இந்த கிரைம் சாமிநாதனும், தனது காவலர்களுக்கு குறிப்பிட்ட பணிகளை ஒதுக்கிவிட்டான். தள்ளிப் போடக்கூடிய பணிகள்தான். அவனிடமே வாய்விட்டுக் கேட்டார்.

“சாமி... சாமி... இன்னைய ஊர்வலத்துல குடிகாரங்க நிறைய வருவாங்க. இப்படித்தான் போன ஊர்வலத்துல.