பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

சமுத்திரக் கதைகள்


“சார் கத்துறாங்க. அது உனக்கு கேக்கலியா? கொல நடந்தாக்கூட பத்து நிமிசம் கழிச்சுதான் வருவியா?”

ஒண்ணாம் நம்பர்க்காரி குறுக்கிட்டாள்.

“வாட்சுமேன் போறாரு பாவம். முதல்ல இந்த கிழவிக்கு ஒரு வழி பண்ணுங்க. ஏணிபொந்துக்குள்ள அபசகுனமா படுத்துக்குறாள். காலங்காத்தால இது முகத்துலதான் முழிக்க வேண்டியிருக்கு. இதுக்கு எதாவது ஒரு வழி பண்ணனும். இது, நாளைக்கே மண்டையப் போட்டா யாரு பொறுப்பு? அசோசியஷன் கிட்ட கேட்கணும். சந்தா பிடிக்க மட்டும் மாதாமாதம் வராங்க. எல்லாம் எட்டாம் நம்பர் பொண்ணு கொடுக்கிற இளக்காரம்.”

இரண்டாம் நம்பர்க்காரியும் வாய்விட்டாள்.

“தேவைன்னா அந்த கவி தாவே, ஆயாவை அவள் வீட்டுக்குள்ள வச்சுக்கலாமே. இந்த கிழவியை ஏவி, ஏன் நம்ம கழுத்த அறுக்காள்?”

“சரி..சரி... போய் தூங்கலாம். சின்ன விஷயம் இது. காலையில் பேசி தீர்த்துக்கலாம்”

ஒண்ணாம் நம்பர்க்காரி, அதே நம்பர் கணவனை சாடினாள்.

“என்ன நீங்க... இந்த ஆயாவ ஒரு பிளாட்காரி மாதிரி நினைச்சு பேசlங்க. திர்க்கறது என்ன திர்க்கறது திர்த்துக்கட்டணும். முரளி சார்! உங்களத்தான். இவரு எப்பவுமே எடக்கு மடக்கானவரு. நாளைக்கு நீங்க அசோசியேசன் தலைவர்கிட்ட பேசி, இந்த அம்மாவை வெளியேத்தணும்.”

இரண்டாம் நம்பர் காரனை தன்னைவிட பெரிதாக நினைக்கும் மனைவியிடம் பொறுமை காக்க முடியாத ஒண்ணாம் நம்பர், வீட்டுக்குள் போய் மனைவியை ஒருபிடி பிடிக்க வேண்டும் என்ற கோபவேசத்தில் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டே போய்விட்டார். அப்போதும் அந்தம்மா எல்லாம் அந்த எட்டாம் நம்பர்காரியால... காலையில் இருக்கு சேதி. அவள