உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகலிகைக் கல்

99


கீழ இறக்கி கேக்கதான் போறோம் என்று ஆயாவை பார்த்து ஒரு முறைப்போடு சொல்லிவிட்டு, கணவன் இழுத்த இழுப்புக்கு பின்வாங்கிப் போனாள். காவலாளியும், ஆய்ாவை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு ஓடினார். கேட்டில் சந்தேகத்துக்கு உரியவர்கள் வருகிறார்களா என்பதை பார்ப்பதற்காக அல்ல... காக்கி யூனிபாரத்தை கழட்டிப் போடவேண்டும். ஒரே அரிப்பு.

ஆயாவிற்கு, எட்டாம் நம்பர் என்ற சொல்லைக் கேட்டதும் அந்த நம்பர்க்குரிய கவிதா நினைவுக்கு வந்தாள். கூடவே, மகிழ்ச்சியும் குதிபோட்டது. நேற்று மழை பலமாக பெய்தது. அந்த அடுக்குமாடி கட்டப்பட்ட லட்சணத்தில் ஏணிப்படி பொந்துக்குள்ளும் தண்ணிர் பெருக்கெடுக்கும் நிலைமை. உடனே ஆயா, அந்த தூக்குப்பையை எடுத்து எட்டாம் நம்பர் கவிதாவிடம், கொடுத்தது, இப்போதுதான் நினைவுக்கு வந்தது. அவளிடம் தான் ஆயா, பால்கார்டு விநியோகிப்பில் செலவு போக மிச்சம் பிடித்த ஒராண்டுகால உழைப்பான ஆயிரம் ரூபாயை கொடுத்து வைத்திருக்கிறாள்.

ஆயா, அந்த ஏணிப்படிகளை இரண்டிரண்டாக தாண்டினாள். பல்புகள் அலங்கார வளைவுகளுக்குள் வைக்கப்பட்டிருந்தாலும் அவை மூளிகளாகவே கிடந்தன. முன்பு ஒரிரு சமயங்களில் சில்லரை திருடர்களுக்கு இந்த விளக்குகளே வழிகாட்டியதாக பழிபோடப்பட்டு, அவை நிரந்தரமாக குருடாக்கப்பட்டன.

ஆயாவிற்கு, படியேற ஏற மூச்சிளைத்தது. மூக்குப்புயல் நுரையீரலை, வாய்வழியாக வெளியே இழுத்துப் போடுவது போன்ற வாதை. சிறிது நேரத்தில், அதே மூக்கு, தொண்டைக்குள் சிக்கிக் கொள்வது போன்ற திணறல். ஆனாலும், இளைப்பாறவோ, களைப்பாறவோ நேரமில்லை. ஏடாகூடம் நடக்கும்முன்பே, ஆவினுக்குப் போய்விட வேண்டும்.

ஆனாலும், ஆயாவின் மனோ வேகத்திற்கு, உடல் வேகம் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் தளத்திற்கு வந்தவள், மேலும்

8

ச. 8.