பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

சமுத்திரக் கதைகள்


உட்கார்ந்து, பாலுறைகளை லாகவமாக கொத்திக் குடிப்பவை. காத்திருந்த காகங்கள் அங்குமிங்குமாக பறந்துவிட்டு, இவளை மாதிரி ஒரு மீன்கார, கிழவி எவளாவது கிடைக்காமலா போவாள் என்ற அனுமானத்தில் பறந்து போயின.

இதற்குள் பால் லாரி வந்துவிட்டது. இருபக்கமும் சாலைகளை அடைத்து தக்காரும் மிக்காரும் இல்லாமல் அனைத்து வாகனங்களையும் ஒரங்கட்டச் செய்து, உருமியபடியே வந்து நின்றது. அந்த உருமலின் பின்னணியில் லாரிக்காரனும், டிப்போக்காரனும் பேசுவது ஆயாவுக்கு சத்தமாகவே கேட்டது.

டிரைவரண்ணே! போனவாரம் எங்க தாத்தா செத்தாரே. அவருக்கு இன்னிக்கு பாலு. நீங்க சடங்குக்கு வராட்டாலும் குடும்பத்தோட சாப்பாட்டுக்காவுது இன்னிக்கு வந்துடுடனும். உங்கள கூப்பிடறதுக்குதான் இன்னிக்கு வந்தேன்.”

“பால் பாயாசத்தோட சோறு போடுவியா?”

“பின்ன என்ன அது இல்லாமலா”

“அப்புறம்பா, எனக்கும் சாயங்காலம் மாமனார், மாமியார் வராங்க. நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது, இப்போவே எனக்கு ரெண்டு லிட்டர் பால் வேணும்.”

டிப்போக்காரன், பரமசிவன் கழுத்து பாம்பான லாரி டிரைவரை திருப்திப்படுத்துவதர்காக ஆயா பதுங்கி இருக்கும் இடத்தை நோட்டமிட்டான். அப்போது -

ஆயா, தனக்கு யாரோ பால் ஊற்றுவது போல அசைவற்று அகலிகைக் கல்லாய் கிடந்தாள்.

தமிழரசு பொங்கல் மலர் - 2001