பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னுரை

இந்தத் தொகுப்பு தவிர்த்து, இதுவரை வெளியான எனது சிறுகதைத் தொகுப்புகள் அனைத்தும், எனக்கு முழுமையான மனநிறைவைக் கொடுத்ததில்லை. பத்திரிகைகள் ‘எடிட்' செய்து வெளியிட்ட கதைகளையே தொகுப்புகளாக கொண்டு வந்தேன். இந்த கதைகளுக்கு மூலங்களை கைவசம் வைத்திருக்காததால் ஏற்பட்ட கோளாரே காரணம். ஆனால், இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் கணிப்பொறியில் தக்க வைக்கப்பட்டவை.

எனவே, இந்தத் தொகுப்பில் நான் முழுமையான எழுதிய கதைகளை அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். இதுவே, இந்தத் தொகுப்பின் பலம், பலவீனமும். ஒரு சில கதைகள், பத்திரிகைகளில் கத்தரித்து வந்ததைவிட, சிறப்புக் குறைவாய் உள்ளதாக எனக்குப் படுகிறது. ஆனாலும், முன்னைய தொகுப்புகளைப் போல் அல்லாமல் பெரும்பாலான கதைகள், எலும்பு கூடாக காட்சி காட்டாமல், ரத்தமும், சதையுமான உள்ளடக்கத்தோடு, எலும்பு,தோல் போர்த்த உருவமாகவும் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன்.

இந்தத் தொகுப்பில், இன்னொரு முக்கிய சிறப்பு அல்லது அந்த சொல்லுக்கு மாறானது, இவை அத்தனையும் கடந்த இரண்டாண்டு காலத்தில் எழுதப்பட்டவை. எழுத்தைப் பொறுத்த அளவில், என் நோக்கும், போக்கும், அன்று முதல் இன்றுவரை அப்படியேதான் உள்ளது. ஆனாலும், கதை சொல்லித்தனமும், மொழி நடையும், காலத்திற்கேற்ப, என்னை அறியாமலே மாறியிருப்பதாகவே கருதுகிறேன். இதற்கு, இந்தத் தொகுப்பு ஒரு எடுத்துக்காட்டு.

முகம் தெரிய மனுசியும், பெண் குடியும், அந்தக் காலத்து திருவாங்கூர் சமஸ்தானத்தின் சாமானியர்வரலாற்றைகண்டுபிடித்து எழுதப்பட்டமெய்யான கதைகள். இத்தகைய கதைகளை எழுதுவதற்கு தமிழாலய நிறுவனர் பச்சையம்மால் அவர்களே, முழுமுதற் காரணம். இதரக் கதைகளில் பெரும்பாலானவை நான் கண்டதும், கேட்டதுமான நிகழ்வுகள் அல்லது அமங்கலங்கள். இவற்றை நடந்தது நடந்தபடி இயல்பாக எழுதாமல், அதற்கு யதார்த்த முத்திரை மட்டுமே நான் கொடுத்திருக்கிறேன். மற்றபடி, இந்த கதைகளின் உரிமையாளர்கள் இன்றைய நமது மக்களே.

இந்தத் தொகுப்பிற்கு விரிவான முன்னுரை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், பேராசிரியர். ராஜநாயகம் அவர்களின்