பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசியர்கள்

117


நான் மட்டும் உஷாரா இல்லாட்டா, நீயே எனக்கு பால் ஊத்தியிருப்பே’

அந்தச் சிறுவன் மழுப்பலாக சிரித்து மழுங்கலானான். முத்துக்குமார் ஒரு உருமல் உருமி விட்டு, சித்தப்பாவின் கையைப் பிடித்து, அவரை, இவனே வழிநடத்துவது போல், தனது காதல் கதையின் அடுத்த எபிசோடை அவிழ்த்தான்.

நானும் மாயாவும், உடலளவுல இடைவெளி கொடுத்தாலும், மனதுக்கு இடைவெளி கொடுக்காமால் நெருக்கமா பழகினோம். ஒருநாள், வழக்கம்போல கடற்கரைக்கு ஸ்கூட்டர்ல ஒண்ணாத்தான் போனோம். என் இடுப்பச் சுத்தி கையை வளைத்து வழக்கம்போல பிடித்திருந்தாள். ஆனால், கடற்கரைக்கு போனதும் ஆளே மாறிட்டாள். முத்து! நான் உனக்கு ஒரு அதிர்ச்சியான செய்திய சொல்லப்போறேன். நான்தான் உன்னை வலிய காதலிச்சேன். இப்பவும் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன். இல்லங்கல. ஆனால், என்னை படிக்க வைத்து ஆளாக்குன என் அன்ணன், அவரோட நண்பனை நான் கட்டிக்கணுமுன்னு பாசமா சொல்லிட்டார். என்னால மீற முடியல. பாசமுன்னு சொன்ன உடனே எனக்கு ஐந்து பேர் நினைவுக்கு வருது. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, காதலன் நீ... கடைசில நீ வந்தாலும், உன் உறவு கடை நிலை உறவல்ல. ஆனாலும் நாலுநாலுதான்... ஒண்ணு ஒண்ணுதான். நாம் கால் பதித்த இந்த கடற்கரை மண், நம் காதலுக்கு புதைமண் என்பது, இப்பத்தான் புரியுது. என் ஒருத்திக்காக என்னை மீட்க நினைக்கிற குடும்பத்தையும் கீழே பிடித்து இழுத்து இந்த மண்ணுக்குள்ள மூழ்க வைக்க விரும்பலன்னு. பொறிஞ்சிட்டாள்.’

‘சிரியஸா பேசினாளா... சிரியலா பேசுனாளா...’

‘சிரியஸாத்தான் சித்தப்பா. பேசி முடித்ததும் திரும்பி பாராம போயிட்டாள். இப்படியும் ஒரு பெண் இருப்பாளா சித்தப்பா.’

இருப்பாள்கள், இருப்பான்கள் என்பது மாதிரி சித்தப்பா அவனை அதிர்ச்சியாக பார்க்காமல், சராசரித் தனமாகவே