பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசியர்கள்

121


முத்துக்குமாருக்கு நகச்சூடாக இருந்த எரிச்சல் அனலானது. சித்தப்பா, தனது பிரச்சனைக்கு திர்வு காட்டுவார், என்றால் அவரோ திர்த்துக் கட்டுவது மாதிரி பேசுகிறாரே. பழையபடியும் அவரை மாயாவிற்குள் கொண்டுவர வேண்டும். எப்படி...

அதோ பாருங்க சித்தப்பா! உயரமா செஞ்சிவப்பா ஒரு இளம்பெண் போறாள் பாருங்க. ஒரு சித்தாள் சிறுவன் தோளுல கையப் போட்டுட்டு, அவன் காதளவுக்கு குனிந்து கிசுகிசுப்பா பேசறதும், தலையை நிமிர்த்தி மற்றவர்கள பார்க்கிறதுமா நடக்காளே... அதான் சித்தப்பா... சடை போட்ட கொண்டையோட, பிறைநிலா மாதிரி கிளிப்ப மாட்டிக்கிட்டு போறாள் பாருங்க.... அவளுக்கு சல்வார் கம்மீஸ் மாட்டினால், அது அசல் மாயாதான்.”

சித்தப்பா அவனை திடுக்கிட்டுப் பார்த்தார். தலையை மேலும், கீழுமாய் ஆட்டிப் பார்த்தார். அவன், தன் பேச்சை விரயமாக்கியதுபோல, அவனை விரயமாக பார்த்தார். பின்னர், அவனை விட்டு சிறிது விலகி தனித்து நடந்தார். வேகவேமாய் நடந்தார். இதனால் அவன்தான், அவர் நடைக்கு ஈடுகொடுக்கும் வகையில் எக்கி எக்கி நடந்தான்.

இருவரும், ஒரு சாலைச் சந்திப்பு வட்டத்தை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, திரும்பி நடந்தபோது ஒரு மணிநேரம் ஒடி இருக்கும்.

காய்கறிகள் ஆங்காங்கே கடைவிரித்திருந்தன. நடமாடும் பழக்கடைகளான தள்ளுவண்டிகள் நடைபோட்டன. ஒய்யாரக் கொண்டையோடும், ஒய்ந்துபோன தலையோடும் இளம்பெண்களும், கிழவிகளுமாய் குறுக்குநெடுக்குமாக போய்க் கொண்டிருந்தார்கள். வீட்டுக்காரிகளை விமர்சிக்கும் உரையாடல்கள். எச்சிச் சோறை சாப்பிடாதடி என்ற உபசேதங்கள். அவள் கிடக்காள் பிஸ்தா’ என்ற சவால் மொழிகள். அத்தனைபேரும் வீட்டுவேலை செய்கிறவர்கள். சங்கம் அமைக்காத குறையாக சங்கமித்தவர்கள். இவர்கள் கடந்துபோன பேருந்து நிலையங்களில் எதிர் திசையை நோக்கியபடி காய்கறிகள் வாங்கவும், பூக்கள் வாங்கவும் புறப்பட்ட ஆண்பெண் கூட்டம்... “என்னைப் பார்க்காமல் என் மனசை பார்” என்பதுபோல் பலாத்தோல் பாதி பிளந்து நிற்க அதன்