பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலவரப் போதை

தமிழக அரசின் இ.ஆ.ப. அதிகாரி உக்கம்சிங், தாடி வைத்த சைக்காட்ரிஸ்ட் டாக்டர் ராம் விவேக், பாப் தலை கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எஸ்தர், சமூக இயல் விஞ்ஞானி பாப்பம்மா, பென்சில் மீசை வைத்த “மனித உரிமை மகேந்திரன் ஆகியோரைக் கொண்ட அந்தக் குழுவை, லோக்கல் இன்ஸ்பெக்டர், தனத லத்திக் கம்பை வரவேற்பு வளையமாக தாழ்த்தி வைத்துக் கொண்டு, அந்த வீட்டுக்குள் வழிநடத்தினார்.

சின்னப் பூட்டு போடப்பட்ட அந்த ஒலை வீட்டின் கதவை, அவர் லத்திக் கம்பில் இரும்பு பூனால், அடித்து நொறுக்கிய போது, கதவு கொக்கியோடு பின்வாங்கியது. அங்கே கிடந்தவனைப் பார்த்து குழு ஆச்சரியப்பட்டதா, அதிர்ச்சி அடைந்ததா என்று ஒரு பட்டி மண்டபமே நடத்தலாம்.

பன்னிர், அந்த வீ ட்டுக்குள் உலக அதிசயங்களில் எட்டாவதால் ஆனது போல் தரையோடு தரையாய்க் கிடந்தான். அந்த ஒற்றை ஒலைவீட்டின் நடுப்பக்கமாக, ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு படுத்தக் கோலத்தில் கிடப்பதுபோல் கிடந்தான். இரும்புக் காப்புகளுக்குள் திணிக்கப்பட்டு, அவற்றில் சங்கிலியால் கோர்க்கப்பட்ட அவன் இரண்டு கைகளும், இடுப்புக்கு இருபக்கமும் சிறிது இடைவெளி கொடுத்து, குத்தி வைத்த கம்பு முளைகளில் இணைக்கப்பட்டிருந்தன. அந்த முளைகளின் அடிவாரத்தைச் சுற்றியிருந்த குருத்து மண்ணில் எறும்புகள் மொய்த்தன. கால்களும் இதே விகிதாசாரத்தில், இதே வகை இரும்புச் சங்கிலிக் கோர்வையால் பிணைக்கப்பட்டிருந்தன. கை விரல்களிலும், கால் விரல்களிலும், தென்னை ஒலை ஈர்க்குச்சிகள், ஒன்றுமாற்றி ஒன்றாய், டேப் கட்டில் பின்னப்பட்டதுபோல் சொருகப்பட்டிருந்தன. வயிற்றுக்கு மேல் ஒரு ரப்பர் பேண்ட், வளைந்து விலாமுனைகளில் குத்தி வைக்கப்பட்ட ஆணிகளைச்