பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலவரப் போதை

137


ஆகவேண்டும் என்ற அனுமானத்துடன் ஈரத்துணி, விருந்தோம்பல் முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்காக, அருகேயுள்ள தனது வீட்டின் திண்ணைப் படிகளில் ஏறி உள்ளே மறைந்தபோது

அரசுக்குழு உறுப்பினர்கள், இன்ஸ்பெக்டர் இருக்கிற தைரியத்தில் அந்த வீட்டை நோக்கி, தங்களுக்குள் விவாதித்தபடியே நடந்தார்கள். டாக்டர். ராம்விவேக், தன்னைக் கேள்வியாய்ப் பார்த்த மனித உரிமை மகேந்திரனுக்கு விளக்கமளித்தார்.

‘இவனை பீடித்திருப்பது ஒரு வித மேனியா. அதாவது அழுங்கு நோய். சாதி, சமயம், ஊரு முதலிய சாக்குப் போக்குகள்ல எல்லாரையும் அடிச்சுப் போட்டிருக்கான். இந்த அடிதடியே, அவன் சிந்தையிலும் செயலிலும் ஊடுருவி, ஒரு அடிக்ஷன்-அதாவது, போதையாகிவிட்டது. சாராயப் போதையைவிட விட பெரிய போதை, இந்த கலவரப்போதை. கூடவே இந்த போதைக்கு சினிமாவுல வருகிற சண்டைக் காட்சிகள் ஒத்தாசை செய்திருக்கும். எல்லோரையும் அடிச்சு முடிச்சுட்டு, இப்போ, இவன், அடிக்கிறதுக்கு ஆளில்லாம, தன்னைத்தானே அடிச்சுக்கிறான். இதுக்கு எம்.டி.வி., அதாவது மேனியாக் டிப்ரஸிசிவ் சைக்கோஸிஸ் என்று பெயர்.”

கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எஸ்தர், டாக்டர் ராம்விவேக்கை எரிச்சலாக்கினாள்.

“எனக்கென்னமோ டி.எஸ்.எச்., அதாவது வேணுமுன்னே தனக்குத்தானே திங்கு விளைவிக்கிற மேனியான்னு படுது.”

“எந்த மேனியாவாவது இருந்துட்டு போகட்டும். இவனை சிகிச்சை அளித்து நார்மலாக்க முடியுமா?”

“நீ சும்மா இரு எஸ்தர்... நானே சொல்றேன். இவனை மனோவசியத்துல மயக்கி, இவன் அடிமனதுல இருக்கிற ஒவ்வொரு நிகழ்வின் நினைவையும் வாய் வழியாய்ப் பேச வைக்கணும். நடித்துக் காட்டும்படிச் செய்யனும். ஒவ்வொரு நிகழ்வையும்... நிகழ்வு என்ன நிகழ்வு... அமங்கலத்தையும் இவன் சொல்லும்