பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

சமுத்திரக் கதைகள்


பாருக்குட்டியின் முகம் வெறும் சதை பந்தாகிறது. காதில் குலுங்கிய உருளை வடிவிலான தக்கா, கரங்களை மறைத்த வளையல்கள், கை நிறைந்த மோதிரங்கள், மார்பில் கவசமான மின்னுமானி, முல்லைமொட்டு, முத்துமாலை, அவல் மாலை ஆகிய தங்க நகைகளையும், காலில் கிடந்த தண்டை கொலுசு வெள்ளி நகைகளையும் ஒவ்வொன்றாக எடுத்தாள். அதை வாங்கப் போன அம்மாயியை திண்டத்தகாதவளாக நினைத்ததுபோல் அவற்றை தரையில் வீசி எறிந்தாள்.

ஆறுமுகப் பெருமாளுக்கு அடங்காச் சினம். அந்த அடிமை தனக்கு சேரவேண்டிய நகைகளை தறவாட்டுக்கு கொடுத்து விட்டாளே என்கிற தாங்க முடியாத கோபம். அந்தக் கோபத்தை செயலில் காட்டினார்.

பாருக்குட்டியின் மார்பு துணியை எடுத்து மாடத்தியின் இடது கையையும், இவளின் வலது கையையும் சேர்த்து கட்டிவிட்டு சவுத்து மூளிகளை இழுங்கடா என்று ஆணையிட்டார்.

அவருடைய அவசரம் அவருக்கு. ஆரல்வாய் மொழியில் இருந்து இருபது மைல் தொலைவிலுள்ள மனித அடிமை வியாபரச் சந்தையான இரணியலுக்கு அவள்களை, அப்போது இழுத்துப் போனால் தான், மறுநாள் காலையில் விலைப் பொருளாய் நிறுத்த (-b.

கருப்பும், சிவப்புமான இசக்கி மாடத்தியும், பாருக்குட்டியும் அந்த இரவில் ஒரே நிறமாய், இருள் நிறமாய் ஏமான்களின் இழுத்த இழுப்பிற்கு ஈடுகொடுக்க முடியாமல் அல்லாடி, தள்ளாடி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த அந்தப்புர சயனஅறைக்குள் “எந்த குடியிலும் பெண் என்கிறவள் கிழ்குடிதான் சொல்வியே... சொல்வியே” என்று ஒற்றைக் குரலில் ஒப்பாரி வார்த்தைகள் வீட்டை ஊடுருவி விம்மி புடைத்து வெளிப்படுகின்றன. இதையடுத்து, எஞ்சிய பெண்களின் ஒலப் புலம்பல்கள் அந்த ஒப்பாரிக்கு தாரை, தப்பட்டங்கள்