பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடசாமியின் ஊர்வலம்

163


சரி. அண்ணாச்சி. வர்ற ஞாயித்துக்கிழம, என் மவனையும், மவளையும் உயிர் காலேஜ்க்கு (மிருக காட்சிச் சாலை) கூட்டிக்கிட்டுப் போறதா இருந்தேன். முதல்ல பிழைக்கிற வழிய பாப்போம். கிண்டிக்குப் போவோம். எனக்கும் இப்போதான் அறிவு வந்துருக்கு. விசேஷம் இல்லாட்டா, இந்த பேப்பர்ல இவ்வளவு துாரம் எழுதமாட்டாங்க.”

“எப்படியோ பிழைக்கத் தெரிஞ்சாச் சரி. ரேஸ் டிப்ஸ் மட்டும் படிக்க மறந்துடாதே. இது விசேஷமான பத்திரிகை. இல்லாமலா லட்சக்கணக்குல விக்கும்? தினமும் இத வாங்கிப்படி. உலக விஷயம் அத்தனையும் தெரிஞ்சிக்கலாம்.”

“சரி அண்ணாச்சி. ஞாயித்துக்கிழமை, நான் லேட்டாய் வந்தாலும் என்னை மறக்காம கூட்டிக்கிட்டுப் போகணும்”

“பணத்தோட வா. அப்புறம் இருபது பாக்கெட் மிட்டாய்க்கு உன் கணக்கு நோட்டுல பற்று எழுதிக்கோ. ஞாயித்துக்கிழம, கிண்டிக்கு நானே ஒனக்கும் சேர்த்து டிக்கட் எடுத்துடுறேன்.”

“எப்படி வேணுமுன்னாலும் வச்சுக்கலாம். இந்த பேப்பர நான் கொண்டு போகட்டுமா?”

“நான் பத்து எழுதிக்கிறேன். கொண்டு போ. பேப்பர நல்லாபடி, அப்புறம் தெரியும் விஷயம். நாளைக்கு டீ குடிக்கிறதுக்கு முன்னாடி, நீயே இத வாங்குவே. பீடியை புடிச்சிட்டு நிறுத்திடலாம். பட்ட சாராயத்த குடிச்சிட்டு நிறுத்திடலாம். ஆனால் இத மட்டும் படிச்சிட்டு நிறுத்த முடியாது. ஏழைங்களுக்கு குதிரைப் பந்தயத்தில் ஜெயிக்கிறதுக்கு வழிகாட்டுற மக்களோட பத்திரிகையாக்கும் இது”

மாடசாமிக்கு மேற்கொண்டு சைக்கிளை மிதிக்கவோ, கடலைமிட்டாய்களை விற்கவோ மனமில்லை. நேராக கம்பெனிக்குப் போய் “உடம்பு சரியில்ல. சைக்கிள் ஒட்ட முடியலுன்னு” ஒரு போடு போட்டுவிட்டு, சைக்கிளையும், சரக்கையும் ஒப்படைத்துவிட்டு, வீட்டுக்கு வந்தார். வழக்கத்துக்கு ‘.ரோதமாக, தந்தை வீட்டுக்கு வந்ததை கண்ட மகன் துரைராஜ்

. I ?”.

ச. 12.