பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

சமுத்திரக் கதைகள்


மூக்கில் விரலை வைத்தான். மகள் சினியம்மை, விரலில் மூக்கை வைத்தாள்.

மாடசாமிக்கு 45 வயதிருக்கும். கிராமத்தில் மூணு மரக்கால் விதப்பாட்டை வைத்து எப்படி எல்லாமோ சமாளித்துப் பார்த்தவர். மானம் பாத்த பூமி, இவரை மானத்தோடு வாழவிடவில்லை. மனைவிக்கு டி.பி... இவர் வயலுக்கருகே பரந்த பெரும் பரப்பைக் கொண்ட ஒரு பண்ணையார்... தனது வாக்கு சாதுரியதாலும், சில்லரை வீச்சாலும், கைவசப் படுத்திவிட்டார்.”

கம்மாவுக்கு ராக்காவலு போவதற்காக, பண்ணையார் ஆட்டுக்கறி கொடுப்பதாக மாடசாமி நினைத்தால், பண்ணையாரோ தன் மலைப்பாம்பு வயலுக்குள், அவனின் குட்டிப் பாம்பு நிலத்தை விழுங்கத் திட்டம் போட்டிருந்தார். இறுதியில் மனைவி இறக்க, அவளின் ஈமச்சடங்கிற்காக, நிலத்தையும், பண்ணையாரிடம் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, வயது வந்த மகள் சினியம்மையையும், மகன் துரைராசுவையும் கூட்டிக் கொண்டு, சென்னையில் வண்ணாரப்பேட்டையில் குடியேறினார்.

தலைநகருக்கு வந்த நான்கைந்து நாட்களில் கடலை மிட்டாய்க் கம்பெனி ஒன்றில், தெரிந்த ஒருவரின் சிபாரிசின் பேரில் முன்பணம் கட்டாமலே சரக்கெடுத்தார். கம்பெனியே அவருக்கு ஒரு சைக்கிளைக் கொடுத்து, அதற்கு ஒரு வாடகையும் வதுலித்தது. எப்படியோ மாடசாமி, ராப்பகலாக அலைந்து தினமும் பத்து, பன்னிரெண்டு ரூபாய்வரை சம்பாதித்தார். ஊரில் ஒன்பவதாவது வகுப்பு படித்த மகனை, பத்தாவதில் சேர்த்தார். கையில் இருநூறுரூபாய் வரை நடமாடியது. இந்த ரூபாயை ஆயிரமாக்கி சொந்தமாக கடலைக் கம்பெனி வைத்து, மகளை நல்ல இடத்தில் தள்ளிவிடலாம். மகனை ஆபீசராக்கி விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில்தான், அவருக்கு அந்த மக்கள் பத்திரிகையின் பரிச்சயம் ஏற்பட்டது.

மாடசாமி, இப்போது படிப்பாளியாகி விட்டார். மக்கள் பத்திரிகை கொடுத்த டிப்ஸ்படி, கடைக்காரருடன் சேர்ந்து பத்து