பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

சமுத்திரக் கதைகள்


கொடுத்து, ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. அவன் இன்னும், பட்டிக்காட்டான் மாதிரி, அக்பரையும், சிவாஜியையும் நினைச்சுக்கிட்டு இருக்கானே! ஒரு மாணவன் கூட அவனிடம் பேசமாட்டாங்கானே! வாத்தியார் கூட அவனை பொருட்படுத்துவதில்லையே’

இந்தச் சமயத்தில்தான், அந்த மக்கள் பத்திரிகையின் தொடர்பு, தந்தையின் மூலம் அவனுக்குக் கிடைத்தது. அவன் நடிகை நந்தகுமாரி நடித்த திரைப்படங்களை பார்த்திருக்கிறான். அவள், அந்த பத்திரிகையில் கொடுத்த பேட்டியைப் பத்துதடவை படித்தான். அவள், அவனுக்காகப் பிறந்திருப்பதுபோல் ஒரு எண்ணம். ஏன் கூடாது? அவன் அக்காள் சினியம்ைைமகூட, அன்றைக்கு இந்தியாவிலேயே அதிகமாக விற்கும் அந்த வாரப் பத்திரிகையைப் படித்துக் காட்டினாளே. அதுல வந்த ஒரு கதையில... ஒரு பணக்காரப் பொண்ணு, ஒரு ஏழையின் கட்டழகுல... எப்படி மயங்குறாள்! நந்தகுமாரியோட சூட்டிங்ல... அன்னிக்கு, அவன், நந்தகுமாரியை பார்த்தபோது, அவள் அவனைப் பார்த்து சிரிக்கலியா?... நானும்... சினிமா நடிகர் மாதரி தானே இருக்கேன்... என்னை காதலிச்சுதான் அப்படி சிரித்திருக்கா... அவள் வீட்டுக்கு ஒரு நாளைக்குப் போகணும்.

இப்போது துரைராசுக்கு, அதிகமாக புத்தி வந்துவிட்டது. நூலகங்களுக்குப் போய், வாரப் பத்திரிகைகளையும் சினிமாப் பத்திரிகைகளையும் கரைத்துக் குடித்தான். எந்தப் போர் எந்த ஆண்டு நடந்தது என்ற சரித்திரம் அவனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எந்த நடிகை, எந்த நடிகரிடம் நெருக்கம் என்பது அவனுக்கு அத்துபடி. சோடியம் குளோரைடும், கால்சியம் நைட்ரேட்டும் சேர்ந்தால் என்ன கிடைக்கும் என்ற ரசாயன விதி தெரியாவிட்டால் என்ன... எந்தெந்த நடிகை, எந்தெந்த நடிகனோடு சேர்ந்தால், படம் எப்படியெப்படி ஒடும் என்பது தெரிந்தால் போதாதா... மீன் சுவாசிக்கும் முறை, தவளையின் “டைஜஸ்டிவ் சிஸ்டம் கரப்பான் பூச்சியின் ரி புரடக்டிவ் முறை"