பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகம் தெரியா மனுசி

5


சாதிப்பழக்கத்துக்கு தகாதபடி உடுப்புப் போட்ட இவளும் ஒரு பொம்பளையா? இந்த ஊருக்கே பெரிய அவமானம். இவள விடப்படாது.

அந்த முண்டுச் சேலைப் பெண்கள், ரவிக்கைப் பெண்ணை நெருங்கியபோது, அவள் ஒரு சிறட்டையில் கரிக்கட்டைகளைப் போட்டு, கண்ணாடி சீசாவில் இருந்து சிமை எண்ணெயை லேசாய் ஊற்றி தீப்பற்ற வைத்து, திமுட்டிக் குழலால் ஊதினாள். துளைகள் இல்லாத புல்லாங்குழல் போன்ற அந்த பித்தளை குழலில், அவளது ஊதோசையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப கரிக்கட்டைகள், நீரு பூத்த நெருப்பாகி, செந்தணலாகி, தியாகி பின்னர் ஜோதியாய் நர்த்தனமிட்டது.

அந்தப் பெண்கள் அவள் ஊதி முடிக்கட்டும் என்று காத்திருந்தார்கள். அவள் நிமிர்ந்தபோது, ஏனோ பேசமுடியவில்லை. அவள் கண்களின் அழுத்தமும், தொய்வில்லாத பட்டறைச் சட்டம் போன்ற உடம்பும், அழகுக்கு அழகு சேர்க்கும் ரவிக்கையும், கம்பீரப்படுத்தும் முந்தானையும், சிவப்பழகிற்கு அறைகூவல் விடுக்கும் கருப்பழகும், அவர்கள் நாக்குகளை கட்டிப் போட்டன.

இதற்குள் குடிசை வீட்டுக்குள் இருந்து பதநீர் பானையை தூக்கிக் கொண்டு வந்த மாமியார் பூமாரி, வீட்டு முற்றத்தில் முக்கோணமாய் பதிக்கப்பட்ட கல்லடுப்பிற்கு மேல், பானையை வைத்தாள். அந்த அடுப்பின் அடிவாரத்திற்குள் ஏற்கெனவே திணிக்கப்பட்ட கிறிப்போட்ட பனைமட்டைகளையும், சுள்ளி விறகுகளையும், சேர்த்துப் பிடித்து அடுப்புக்குள்ளயே ஒரு தட்டு தட்டினாள், பிறகு ரவி க்கைகார மருமகளிடமிருந்து, பாதிக்கருகிப்போன சிறட்டையோடு நெருப்பு துண்டங்களை வாங்கி அடுப்புக்குள் போட்டு, தீமூட்டிக் குழலால் ஊதினாள். நெருப்புப் பற்றியதும், தொடைகளில் கை, கால்களை ஊன்றி எழுந்து, அந்தப் பெண்களை ஏறிட்டுப் பார்த்தாள். மருமகள் அருகேயுள்ள மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்ட மூன்று மாடுகளுக்கும், ஒரு கன்று குட்டிக்கும் வைக்கோலை சமச்சீராய் வைத்தாள். பிறகு கருஞ்சிவப்பான கன்றுக் குட்டியின் முதுகை தடவிவிட்டாள். அந்த