பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சமுத்திரக் கதைகள்


குட்டி முதுகை பம்மவைத்து, அவள் முகத்தை முகர்ந்தபோது, இடம்தெரியா ஊரில் இடறிவிழுந்த துக்கத்தை மறந்தாள்.

அந்தப் பெண்களுக்கு, எடுத்த எடுப்பிலேயே ரவிக்கைகாரியை விமர்சிக்க மனமில்லை. “நீ கேளு... நீயே கேளு...” என்பது மாதிரி ஒவ்வொருத்தியும் மற்றவள்களின் முகத்தைப் பார்த்தபோது, ஒரு நடுத்தர வயதுப் பெண், பூமாரிக் கிழவியிடம் பீடிகை போட்டாள். “பனவிள... விடிலில பயனி காய்க்காம, இங்க எதுக்காவ காய்க்க சித்தி?”

“ஒன் காது செவிடா? தமுக்குச் சத்தம் கேக்கல? விளயில பயினி காய்ச்சா, சிறட்ட கூட மிஞ்சாது. யான போன கரும்புத் தோட்டமாவது கொஞ்சம் நஞ்சம் ஒப்பேரும், ஆனா, மவராசா பரிவாரப் பயலுக போன இடத்தல புல்லு கூட முளைக்காதே.”

கன்றுக்குட்டியின் முதுகை தடவிவிட்டபடியே மாமியார் சொல்வதை அதிசயமாய் கேட்பதுபோல் முகத்தை அண்ணாந்து வைத்த ரவி க்கைக்காரி, அந்தப் பெண்களின் அம்மண மார்பகங்களை, அறுவெறுப்பாகவும், பின்னர் அனுதாபமாகவும் பார்த்து, முகஞ் சுழித்தபோது, ஒரு முன்கோபிப்பெண் முரட்டுத்தனமாக கிழவியைச் சிண்டினாள்.

“தண்டோராச் சத்தம் வயசான ஒனக்கு கேக்கும்போது, எங்களுக்கு கேக்காதா? சாதி அனுஷ்டானத்த விட்டோமுன்னா மாறு கால் மாறு கை வாங்கிடுவாவ... பேசாம உன் மருமவள எங்கள மாதிரி மேல்துளி இல்லாம நிக்கச் சொல்லு. கச்சேரியில போயி நாங்களே சொல்லும்படியா வச்சிப்புடாத.”

ரவிக்கைக்காரி, அவர்களை சுட்டெரித்துப் பார்த்தபொழுது, பூமாரி கிழவி மன்றாடினாள்.

‘காலங்காலமா இந்தமாதிரி சட்ட போட்டிருக்காளாம். இப்படி போடுறது அவ ஊரு பழக்கமாம். உங்கச் சிலைய களைஞ்சா எப்படி ஒங்களுக்கு இருக்குமோ, அப்படி மேல்சட்டைய கழுட்டுனா, அவளுக்கு இருக்குமாம். அத கழட்டுறதுக்கு கூச்சப்படுறா. இந்த சட்டம்பி பய... அதான் என் மவன்... இவளை எப்படியோ மசக்கி கூட்டி