பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகம் தெரியா மனுசி

13


“நீ பேருக்கு ஏத்தபடிதான் இருக்கே. ஆனாலும், இளப்பசாதிக இந்த மாதிரி பேரெல்லாம் வெக்கப்படாது. பேசாம நீசம்மான்னு வச்சுக்க”

மணியக்காரர் பல்லிளித்துப் பேசுவது, வலிய கணக்கிற்குப் பிடிக்கவில்லை. ஏவலாளிகளுக்கு உத்தரவிட்டார்.

“இவளோட மேல்சட்டையையும், தோள் சிலையையும் அவுத்துப் போடுங்கடா... சேலையில பாதியை கிழிச்சி எறியுங்கடா...”

அந்த ஏவலாளிகள், கரங்களை கூர்கத்திகள் ஆக்கியதுபோல் கைகளை நீட்டி, கம்புகள் போல் விறைக்க வைத்து, அவளை கண்போட்டுப் பார்த்தபடியே நெருங்க நெருங்க, அவள், ஒதுங்கி ஒதுங்கி பின்புறமாய் நடந்து ஏமான்களைப் பார்த்து, குரல் உயர்த்தி முறையிட்டாள்.

வேண்டாங்கய்யா... ஒங்களுக்கு கோடிப்புண்ணியம் அய்யா. ஒருநாள் ஒரு பொழுது கொடுங்கய்யா... நான் அவிய வந்ததும் சொல்லிட்டு, கண்காணாத இடமா பார்த்து ஒடிப்போறேய்யா”

“ஏல தீவட்டி தடியன்களா, நான் சொன்னது உங்க காதுல ஏறல. அவள அம்மணமாக்குங்கடா”

“வேண்டாங்கய்யா... ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கூட, 'அது' மறவாத்தான் இருக்குது. மனுசங்களுக்கு அப்படித்தானய்யா இருக்கணும்? ஒங்க பெண்டு பிள்ளைகள இப்படி செய்தா நீங்க பொறுப்பியளா?” 'படுகளத்துள ஒப்பாரிய கேட்கப்படாதுடா...இவா...இந்த பக்கத்த நாற வக்க வந்தவ. எளப்ப சாதிகள தூண்டி விடுறவ... இவள... முளையிலேயே கிள்ளி எறியணும். அவள அம்மணமாக்குங்கடா"

ஏவலாளிகள், துச்சாதனர்களாய் ஆனார்கள். ஒருவன் ராசம்மாவின் கரங்களை பின்புறமாக வளைத்து பிடித்துக் கொள்ள, இன்னொருத்தன் அவள் தலையை பக்கவாட்டில் சாய்த்துப் பிடித்தான். மூன்றாமவன், அவள் முந்தானையை இறக்கினான். நான்காவது ஆசாமி அவள் ரவி க்கையின் முன் பக்கம்