பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதிர் கன்னி

41


கம்மாக்களிலும் விவசாயக் கூலியாக இருந்தவள். இவள் பாட்டி, இதே சென்னை நகரில், ஒரு மாளிகைக்கார முறைமாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு, தொள்ளக்காது... தொள்ளக்காது...’ என்று வர்ணித்தபடியே, வேடிக்கை பார்த்த கூட்ட மொய்ப்பை தாங்க முடியாமல், கணவனின் சம்மதத்தோடு, தொங்கிய சதைக்கோடுகளை அறுத்து, இருபக்கத்து ஒட்டைகளையும் இணைத்து, கம்மல் போட்டுக் கொண்டவள். ஆனாலும், அந்தக் காதுகள் அறுவைச் சிகிச்சை தடயங்களோடு தோன்றின. இதோ நிற்கிற இவள் அம்மாவோ, காதுகளில் எந்த வில்லங்கமும் இல்லாமல், கம்மல்களை போட்டிருப்பவள். இந்தக் கிதாவோ, வளையங்களை போட்டிருக்கிறாள். மூக்கில் ஒட்டைபோட்டு, அதை தங்கத்தாலோ வைரத்தாலோ அடைக்க வேண்டிய அவசியம் இல்லாதவள். அதுவும், சின்ன வயதிலேயே காது குத்தியதால், இந்த வளையங்கள் உள்ளன. இவள் பள்ளிக்கூடக் காலத்தில் பேசிய பேச்சை வைத்து அனுமானித்தால், அப்போது இணங்கி இருக்கமாட்டாள். இந்தக் காதுகளும் மூக்கைப்போல் இருந்திருக்கும். மாதம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், கைகளில் வளையல்களோ, உதட்டில் செயற்கை செஞ்சிவப்போ இல்லாதவள். அம்மாவின் வற்புறுத்தலால் கழுத்தில் மட்டும், மெல்லிய செயின் அணிந்திருக்கிறாள். இந்த “இழப்புகளுக்கு' ஈடு செய்வதுபோன்ற முக லட்சணம்.

அருணாசலம், ஏறுமுகமான சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மகளை பெருமிதமாகப் பார்த்தபடியே கேட்டார்.

‘ஏதோ நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன்னு நினைக்கேன். சிக்கிரமா சொல்லம்மா! நல்லதை உடனடியாகவும், கெட்டதை மெள்ள மெள்ளவும் சொல்லணும்.”

கிதா, எழுந்து அந்தப் பேழையைப் பிரித்து, ஒரு லட்டை அப்பாவின் வாயிலும், இன்னொரு மைசூர் பாக்கை அம்மாவின் வாயிலும் திணித்தபடியே சிரித்தாள். அந்தச் சிரிப்பு, அப்பாவை தொற்றிக் கொண்டபோது, அம்மாவை துடிக்க வைத்தது. மனதிற்குள் பேச வைத்தது.