பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதிர் கன்னி

53


“மெத்த படிச்சா சுத்த பைத்தியமாம். அதிகமாய் படிச்சுட்டமுன்னு அடாவடியாய் பேசாதடி... நாக தோஷம் கழியத்தான் போகுது... நம்ம சாதியிலலேயே உனக்கு, உன்னைவிட ஒசத்தியாய் ஒரு பையன் கிடைக்கத்தான் போறான்.”

“பார்த்தியா... பார்த்தியா... உனக்குக்கூட மருமகனா வரப்போகிறவன், மகளைவிட ஒசத்தியாவும், ஒரே சாதியாய் சேர்ந்தவனாய் இருக்கணும் என்கிற ஒரு நினைப்பு, உன்னை விட்டுப் போகலை பாரு... உன்னை சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் சோசியல் கண்டிஷனிங்... அதாவது, காலங்காலமாய் ஏற்பட்டு வரும் சமூக நிர்ப்பந்தம். நம்ம நாட்டுல... ஒவ்வொரு சாதியும், ஆரம்ப காலத்துல ஒரு செல் உயிரினம்போல, ஒற்றை மனிதனில் இருந்து, அண்ணன்-தம்பியாய், அக்காள்-தங்கையாய், பங்காளியாய், பிறகு ஒரு கூட்டமாய் பரந்து விரிந்து மாறியதுதான் சாதி. ஒரு சாதியில் உள்ளவர்கள் எல்லாரும், ஒரு தாய் மக்கள். அதாவது, அண்ணன்-தங்கைகள் அல்லது அக்காள்தம்பிகள். ஆக மொத்தத்துல, ஒரு சாதிக்குள்ளேயே கல்யாணம் செய்யுறது, சொந்த சகோதரனை கட்டிக்கிறது மாதிரிதான்.”

“எம்மாடி... எப்படி வாய் பேசுறாள் பாருங்க.. ஏங்க! குத்துக்கல்லு மாதிரி நிற்கிறீங்க.. அவள ரெண்டு அதட்டு அதட்டுங்க...”

கீதா, தந்தையின் தலையை நிமிர்த்தியபடியே, கெஞ்சாக் குறையாய் பேசினாள். தந்தையுடன், தத்துவார்த்தமாக பேசுகிறவள். அன்று அது பொழுதுபோக்கு. இன்றோ, ஒரு அவசர அவசியம்.

“நான் சொல்றதை கேட்டுட்டு, அப்புறமாய் வேணுமுன்னால், அதட்டுங்கப்பா... 'ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் வலுவுள்ளவைகளே வாழ்கின்றன' என்பது பார்வின் தத்துவம் என்பது உங்களுக்குத் தெரியும்.'புறமே அகத்தை தீர்மானிக்கிறது' என்பது மார்க்சியத் தத்துவம். இதுவும் உங்களுக்குத் தெரியும். இந்த இரண்டிற்கும் முரண்பாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. டார்வின் சொன்ன 'ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்' என்பதை, அப்போதைய