பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

சமுத்திரக் கதைகள்


முன்கூட்டிச் சொல்லியிருந்தால் நானாவது கூடப்போய் இருப்பேனே?

‘இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் அவனை சுயமா விடமாட்டேங்கிற ... விட்டுப்பி டிம்மா... தண்ணிர்ல இறங்கினால்தான். நீச்சல் அடிக்க முடியும். டேய் ரயிலுக்கு நேரமாயிட்டு... புறப்படுடா.

தமயந்தி, மெளனியானாள். கணவனை விட்டு, சிறிது விலகி ஒரு சுவரில் போய் சாய்ந்துகொண்டாள்.

அந்த இருவருக்கும் நடந்து முடிந்த விவகாரமோ அல்லது நடந்து கொண்டிருக்கும் மெளனப்போரோ புரியாமல் விழித்த தாமோதரனின் கையை பிடித்து இழுத்தார் அண்ணன். மனைவியைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே, அவன், துள்ளாத ஆட்டுக்குட்டியாய் நடந்தான். படிக்கட்டுகளில் சகோதர காலணிச் சத்தங்கள், ஆலைச் சங்குபோல் ஓங்கி, பின்னர் சன்னம் சன்னமாய் குறைந்துக் கொண்டிருந்தது. தமயந்திற்கு மனம் கேட்க வில்லை. அவர்கள் காருக்குள் நுழையும்போது, மாடி தாழ்வாரத்தில் ஓடி வந்து நின்றபடியே வார்த்தைகள் ஒன்றை ஒன்று முட்டி மோத மூத்தாரிடம் பேசினாள்,

அத்தான்... உங்க தம்பிய வேளாவேளைக்கு மாத்திரையை போடச்சொல்லுங்க. யாரவது அப்பர் பெர்த்துக்குப் போகச்சொன்னால் முடியாதுன்னு சொல்லச் சொல்லுங்க. திரும்பி வரும்போது உங்க தம்பிய நீங்கதான் கூட்டி வரணும். அய்யோ கடவுளே... சூட்கேஸயும், பெட்டியையும் எடுக்க மறந்துட்டார் பாருங்க.

தமயந்தி ஓடிப்போய் இரண்டு கைகளிலும் ஒரு சின்ன பெட்டியையும் ஒரு பெரிய பெட்டியையும் பிடித்துக்கொண்டு, ஒரு தட்டை தாழ்த்திய தாராசு போல் கைகளை ஆக்கிக் கொண்டு கார் அருகே வந்தாள்.

‘இந்தாங்க உங்க தம்பியோட பெட்டிங்க... அவர பத்திரமா பார்த்துக்கச் சொல்லுங்க."