பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. பெரியவரும், தோழனும்

தள்ளாத வயதிலும், தன்னை பார்க்க வரும் தோழர்களிடம் அவர் பேசிய விதம் பண்பின் உச்சகட்டமாகும்.

மருத்துவமனையில் எம்.கே.

எம்.கே. அவர்கள் சென்னைப் பொது மருத்துவமனையில், நோய்வாய்ப்பட்டுச் சேர்க்கப்பட்டிருந்த நேரம். நான் அவரை அங்குப் போய்ப் பார்த்தேன். அவரது கையிலும் காலிலும் கட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த அவர், பேச்சுவாக்கில் இங்கேகூட சிபாரிசுக்காக ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். என்று சிரிப்பும், கேலியுமாக சொன்னார். அவர் சொன்னதன் உள் அர்த்தம் புரிந்த நான் இப்படித்தான் உலகம் ஆயிட்டுது என்று சலிப்பாகச் சொல்லிவிட்டு, நீங்கள் என்ன செய்தீர்கள் என்றுக் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, அவர் வந்த காரியத்தை முடித்துக் கொடுத்தேன்’ என்றார். எனக்கு அவரை ஐந்து நிமிடம் மெளனமாகப் பார்க்க முடிந்ததே தவிர, மறுவார்த்தை பேச முடியவில்லை. இவர் அற்புதத்திலும் ஒரு அற்புதம். மனிதாபிமானத்திற்கு ஒட்டுமொத்தமான உருவம்.

எம்.கே. தலைமையில் திரைப்படம்

எனது ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவல் புத்தம் புது காலை’ என்ற தலைப்பில் திரைப்படமானது. (படம் இன்னும் டப்பாவுக்குள்ளேயே இருப்பது என்பது வேறு விஷயம்). சோவியத் கலாச்சார மாளிகையில் இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தின் ஆதரவுடன் போட்டுக் காண்பித்தோம். எம்.கே. அவர்கள் அதற்கு தலைமை வகித்தார். படம் முடியும் போது அவர் உரையாற்றுகையில், அந்தப் படத்தை பெரிதும் பாராட்டினார். இதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிறகு, தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது, இந்தப் படம் அரங்கேறுவதற்கு ஆவண செய்வதாகக் கூறினார். ஒரு வாரத்திற்குள், தம்மைச் சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அ வ ர து செ ல் வாக் கி ல் அந் த ப் பட த் ைத பிரபலப்படுத்தியிருக்கலாம். ஆனாலும், அவரது தள்ளாமையைக் கண்டும், அந்த மகத்தான தலைவரை, அவருக்கு இருக்கும் கட்டாயப் பணிகளைக் கருத்தில் கொண்டும், என்னளவிலாவது விட்டு வைக்க வேண்டும் என்றும் நினைத்தேன். அதனால், இது சம்பந்தமாக அவரிடம் நான் எதுவுமே பேசவில்லை. அந்த தியாகிக்கு அவரது சிரமத்தைக் கூட்டாமல் இருப்பதற்காக நான் என் வரையில் செய்த சிறு தியாகம் இது.