பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பாரதி என்ற மனிதன்

“மண்வெட்டி கூலிதின்னலாச்சே” என்று துவங்கி

“பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்

பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”

என்று நீட்டி,

“வீர மறவன் நாமன்றோ? - இந்த

வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”

என்று முடித்தானாம்.

இருட்டடிப்பு

பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை எடிட்’ செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும் வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு, பாரதிய்ைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி, “உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்” பிராமண விரோதி அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர் என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல் கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை, தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன் பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி, அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் ‘எடிட்டான கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர் வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள், அடைக்கிறார்கள்.

பாரதியின் பாடல்களுக்குப் பின்னே

பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப் பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப் பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்.

அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும், இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,