பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 14 அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள்

ஆனாலும், மூத்தமகனான பக்தவசலத்தை (பொன்னிலன் மேல்படிப்பு படிக்க வைக்க படாத பாடுபடுகிறாள். உருட்டிப்பெறட்டி, பணம் திரட்டி, அவனைப் படிக்கவைத்தும் விடுகிறாள். வீட்டுப்பொதுச் கவரை பலவீனமாக்கியதோடு, அதைப் புதுப்பிக்க போகும் போது வம்புக்கு வந்த பங்காளி கந்தசாமியை எதிர்த்து நிற்கிறாள். இந்த வரலாற்றை சொல்லும்போது, சோகமும் வீரமும் கைகோர்க்கின்றன.

சொந்த அண்ணனின் மகள் கனியைவிட, மூத்தய்யாபேத்தி புஷ்பத்தை மருமகளாக ஏற்றுக் கொள்ள இலைமறைவு காப்மறைவாய் ஆசைப் பட்டதும் இந்த நூலில் இந்த அம்மாவை மீறி ஒரு தகவலாக வந்துள்ளது. அத்தைமகன் மீது காதல் வயப்பட்ட கனி, அந்த அத்தைக் * பிடிக்க வில்லையென்று நினைத்து அத் ஊருக்குப் போகச்சொல்லுங்க என்று சினந்து சொல்வது பகட்டில்லாத இந்த மண்ணின் மகள்களல் மட்டுமே முடியக்கூடியது.

மாமியார்

மருமகளான கனி, தனக்குப் பிடிக்கவில்லை என்பதை மாமியாரான அழகிய நாயகியம்மாள் கருங்கச்சொல்லி விளங்க வைக்கிறார். இதை விலாவாளியாய் விவரிக்காததில் ஒரு முதிர்ச்சியான, முன்னெச்சரிக்கையான மாமியாரைப் பார்க்கிறோம்.

ஆனாலும் நாடறிந்த படைப்பாளியாய் திர்ந்திருக்கும் அழகிய நாயகி அம்மாள் இப்போது குடும்பப் பொறியிலிருந்து மீண்டு, சமூகத்தளத்திற்கு வந்திருப்பதால், மருமகள் மீதான கோபம் தணிந்திருக்கும் என்றும் நம்பலாம். மருமகளுக்கும் தனது மாமியாரான, தனது அய்யாகூடப் பிறந்த மாமியாரின் புகழில் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். இதுதான் மனோதத்துவம்.

இறுதியாக.

மண்வாசனையும், சொல்லடைகளும், வளமான வர்ணனைகளும் கொண்ட இந்தப்படைப்பில் என்னால் முற்றிலும் ஒன்றமுடிகிறது. இதில் என் மூளை மட்டுமல்லாது, என் இதயமும் ஒட்டிக் கொள்கிறது. காரணம் இவரது காலத்தில் நடந்த கிராமத்து நிகழ்ச்சிகளும், பழக்க வழக்கங்களும், சண்டைகளும், சச்சரவுகளும்,அம்மன் கொடைகளும், எனது கிராமத்திலும் நகலெடுத்தது போல் நடந்தவை. இந்தப்படைப்பு என்னை ஏழெட்டு வயது சிறுவனாய் கிராமத்தில் திரிய வைக்கிறது. அந்தச் சிறு வயதிலிருந்து இன்றைய ஐம்பத்தெட்டு வயதுக்கு இன்னும் நான் திரும்பவில்லை. என்னைப்போல் எவரும், இதைப் படித்து முடிக்காமல் வைக்கமுடியாது. நான்கைந்து மணிநேரம் வாசகனின் கவலையை மறக்க வைக்கும் கவலை. கவலையே ஒரு சாதனைக்கு அடித்தளமாகும் என்பதை எடுத்துரைக்கும் படைப்பு.

தாமரை - செப்டம்பர், 1999.