பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் | 29

சூளுரைத்தேன். சித்தப்பா-சித்தி பயந்து விட்டார்கள். ஒரே ராஜ மரியாதை-நான்கு நாட்களுக்கு. நான் சாப்பிடுகிற வேகத்தைப் பார்த்த சித்தப்பா “இவன் சாப்பிடப் பிறந்தவனே தவிர, சாகப் பிறந்தவன் அல்ல’ என்பதைப் புரிந்து கொண்டு திட்டத் துவங்கினார். ஒருநாள், எனக்கு வெறுப்பும் வந்துவிட்டது. “வேலையில் சேராமல் இந்த வீட்டுல நுழைய மாட்டேன்,’ என்று சொல்லிவிட்டு, இரண்டு பேண்ட் சட்டைகளை ஒரு கைப் பையில் வைத்துக் கொண்டு,

வெளியேறி விட்டேன்.

கையில் ஐந்து ரூபாய்

எங்கே போவது என்று தெரியவில்லை. கையில் ஐந்து ரூபாய்தான் இருந்தது. நேராக காஞ்சிபுரம் போனேன். அப்போது காங்கிரஸ் பேச்சாளராகவும், லாரி டிரைவராகவும் இருந்த என் நண்பர் வடமலை ராஜ் அங்கே இல்லை. திடீரென்று ஒரு எண்ணம். கல்லூரி மாணவனாக இருந்தபோது, அச்சரப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திரு. வெங்கட சுப்பா ரெட்டியாரை ஆதரித்து மேடைகளில் பேசியிருந்தேன். அவருடைய மருமகன் திரு. ஸ்ரீராமுலு ரெட்டியார் (எழுத்தாளர் சரோஜினியின் கணவர்) அப்போது சொற்பொழிவிற்காக பணம் நீட்டினார். நான், அதை வாங்க மறுத்துவிட்டேன். இதனால், அவருக்கு என் மீது அளவு கடந்த பற்றுதல். அப்போது அவர் அச்சரப்பாக்கம் பஞ்சாயத்து யூனியன் தலைவர். அவரிடமே வேலை கேட்கலாமே?

கூடவே ஒரு போலீஸ்

காஞ்சிபுரத்தில் இருந்து, மதுராந்தகம் கூட்டு ரோட்டில் இறங்கி, வேடந்தாங்கலைப் பார்த்து நடந்தேன். ஒரு போலீஸ்காரரும் என்னுடன் வந்தார். ஒரு கிலோமீட்டர் வரைக்கும் நீங்க போட்டார். இரண்டாவது கிலோமீட்டரில் அப்பா போட்டார். மூன்றாவது கிலோமீட்டரில் நான் கேடியாக இருப்பேன் என்று ‘டா’ போட்டார். நல்ல வேளையாக வேடந்தாங்கல் வந்துவிட்டது. இல்லையானால், நான்காவது கிலோமீட்டரில், அவர் என்னை அடிக்கவும் அடித்து இருப்பார்.

ஸ்ரீராமுலு ரெட்டியார் என்னைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றார். எதிரே உள்ள நாற்காலியில் உட்கார வைத்தார். போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் ஏதோ பேசி அனுப்பிவிட்டு, என்னைப் பார்த்தார். நான் வந்த காரியத்தைச் சொன்னேன். இவ்வளவுதானா என்று

. C .