பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 வேரில் பழுத்த பலா

சொல்லிவிட்டு ‘நான் யூனியன கமிஷனருக்குப் போன் செய்றேன். இன்னும் இரண்டு நாளில், அவரைப் பார்த்துவிட்டு, வாத்தியார் வேலையில் சேருங்கள். அப்புறம் வேற வேலை தேடலாம்” என்றார்.

நான் புறப்பட்டேன். இரண்டு நாட்களுக்கு என்ன செய்வது? கையில் ஒரு ரூபாய்தான் இருந்தது. அவரிடம் கேட்க வெட்கம். தயங்கித் தயங்கி திரும்பி நடந்தேன். வழியில் எனக்காக காத்திருந்தவர் போல் தோன்றிய போலீஸ்காரர்: “ஐயாதான் ரெட்டியார்கிட்டச் சொல்லி என் மகளுக்கும் வேலை வாங்கித் தரனும், செகண்டரி கிரேட்” என்றார்.

விபரீத எண்ணம்

எனக்கு ஒரு விபரீத எண்ணம். அதுக்கும் நானாச்சு. நூறு ரூபாய் தள்ளும் என்று கேட்கலாமா? லாக்கப்பில் தள்ளத் தயாராக இருந்தவர், பணத்தைத் தள்ளுவார் என்பதில் சந்தேகம் வரவில்லை. சீ, இப்பவே இந்த புத்தியா? என்று என்னை நானே கோபித்துக் கொண்டு நடந்தேன். திடீரென்று, ரெட்டியார் கூப்பிடுவதாக, ஒருவர் வந்து சொன்னதும், ஸ்ரீராமுலு ரெட்டியாரிடம் ஒடினேன். அவர் சிரித்தபடியே தம் பி , த ப்பா நினைக் கப்படாது. எல்லோருக்கும் பணத்தட்டுப்பாடு வரத்தான் செய்யும். எனக்குக் கூட வந்திருக்கு. அதனாலதான் கேட்கிறேன். கையில பணம் இருக்கா, இல்ல நான் தரட்டுமா? என்றார். எனக்கு அழுகை வந்தது. அடக்கிக் கொண்டேன். சொற்பொழிவுக்கு அவர் நீட்டிய பணத்தை வாங்க மறுத்த நானா இப்போது பணம் கேட்பது? கூடாது. கூடாது. “பணம் இருக்கு” என்று கம்பீரமாகப் பதிலளித்துவிட்டு திரும்பி நடந்தேன். பஸ் கட்டணத்திற்குரிய பணம் இல்லை. காஞ்சிபுரம் வரை நடப்பது என்று தீர்மானித்து நடந்து கொண்டிருந்தேன். கண்ணிர் தானாக வந்தது. இவ்வளவு தூரத்தையும் எப்படி நடப்பது? திடீரென்று ஒரு கார் வந்து நின்றது. ஸ்ரீராமுலு ரெட்டியார் சிரித்தபடியே நானும், உட்களுக்காக இன்னைக்கே காஞ்சிபுரம் வாரேன், ஏறுங்கோ, என்றார்.

குளத்தில் விழுந்து சாகலாமா?

காஞ்சிபுரத்தில் என் நண்பர் வடமலைராஜ் இல்லை. எப்படியோ அங்கே ஒரு நாள் சமாளித்துவிட்டு, அச்சரபாக்கம் போய்ச் சேர்ந்தேன். யூனியன் அதிகாரிகள் எதுவுமே தெரியாது என்றார்கள். ஸ்ரீராமுலு ரெட்டியாரோ, டெல்லிக்குப்