பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 32 வேரில் பழுத்த பலா

நான் உத்தரவு போட்டது காரணமாக இருக்கலாம். அல்லது ஒருவேளை நானே கிராஜுவேட்-தலைமை ஆசிரியர்’ என்று அகங்காரமாக நடந்திருக்கலாம். சமயத்தை எதிர்பார்த்து இருந்தார்.

சாதிய மேலாண்மை

ஒரு நாள் நல்ல மழை. பள்ளிக்கூடம் ஒழுகியது. இதே இந்த ஆசிரியர் என்னிடம் வந்து “ஸார்.ஸ்கூல் ஒழுகுது. பேசாமல் கிருஷ்ணன் கோவிலுல ஒரு வகுப்பை வைக்கலாம்.” என்றார் வினயமாக. நானும் அதற்கு உடன்பட்டு, இன்னொரு ஆசிரியரை, மாணவர்களுடன் கோயிலுக்குப் போகும்படி சொன்னேன்.

அரைமணி நேரத்திற்குப் பிறகு இரண்டு ஹரிஜன மாணவர்கள் அழுது கொண்டு வந்தார்கள். “கோவிலுக்குள் எப்படிப் போகலாம்?” என்று அவர்களை ஊர் மக்கள் அடித்தார்களாம். “இதை விடக்கூடாது ஸார்,” என்றார் அந்த ஆசிரியர். நான் கோபத்துடன் கோவிலுக்குப் போனேன்.

ஹரிஜன மாணவர்களின் சிலேட்டுக்களும், நோட்டுப் புத்தகங்களும், கோவிலுக்கு வெளியே சிதறிக் கிடந்தன. ஒரிரு பெஞ்சுகள் உடைக்கப்பட்டு வெளியே கிடந்தன. ஹரிஜன மாணவர்களுடன், இதர மாணவர்களும் சேர்ந்து அழுது கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும், சத்தமாக புலம்பினார்கள். “இந்த நாட்ல எல்லாரும் சமம்டா...வாங்கடா கோவிலுக்குள்ளே போகலாம். ஊர்க்காரங்க என்ன செய்யுறாங்கன்னு பார்த்துடுறேன்,” என்று சொல்லிக் கொண்டே, கோவிலுக்குள் நுழையப் போனேன்.

ஊர்க்காரர்களில் ஒருவர், “வாத்தியாரே, நீர் வேணுமுன்னால் போகலாம். காலனி பசங்க போனால்....” என்றார். நான், அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே ஹரிஜன மாணவர்களை இழுத்துக் கொண்டு நுழையப் போனேன். பஞ்சாயத்துத் தலைவர் ஊரில் இல்லை. ஊர்த் தலைவர்கள் என்னைத் தாக்கலாம் என்ற சூழல். எனக்கோ, மகாத்மா காந்தியின் நினைவு மட்டுமே நின்றது. திடீரென்று, தையல் ஆசிரியரான கேசவன் செட்டியார் என்பவர், என் காலில் நெடுஞ் சாண்கிடையாக விழுந்து, “ஸ்ார். இந்த ஊருக்குப் புத்தி வர இன்னும் இருபது வருடம் ஆகும். வத்தி வச்சு விட்டது கிழட்டு வாத்தியான். இவங்க அப்பாவிங்க, ஒங்களால ஊர்ல