பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வேரில் பழுத்த பலா

என்னைப் பார்த்ததும் அந்த அதிகாரி கத்தினார். சஸ்பெண்ட் செய்யப் போவதாக மிரட்டினார். உடனே நான், எனக்குத் தெரிந்த ஒட்டை ஆங்கிலத்தில் அப்படி ஏற்பட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சொன்னேன். வேலைபோய் வெளியே சோற்றுக்கு திண்டாடுவதைவிட உங்கள் அறையிலேயே உண்ணாவிரதம் இருப்பேன் என்கிற மாதிரி ஏதோ ஒரு விரக்தியில் உரத்துக் கத்தினேன். அந்த அதிகாரி தனது சுருக்கெழுத்தாளரை வரவழைத்தார். நானோ என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று வீம்பாக இருந்தேன். உடனே அந்த அதிகாரி எனது செய்திப் பிரிவுத் தலைவர் வெளியிட்ட சர்க்குலரை ரத்து செய்வதாகவும், இப்படிப்பட்ட சர்க்குலரை இனிமேல் அவர் வெளியிடக்கூடாது என்றும் டிக்டேஷன் கொடுத்தார். இந்த வெற்றியை என்னால் ரசிக்கக்கூட முடியவில்லை. இந்தப் போரில் நான் வெற்றி பெற்றாலும் அதில் கிடைத்த காயங்கள் இப்போதுகூட வலிக்கின்றன.

சிறையில் செய்தி வாசிப்பாளர்

இந்தச் சமயத்தில் இன்னொரு போதாத வேலை. நான் தனியாக அறை எடுத்து ஒரு தோழரோடு தங்கியிருந்தேன். அதற்கு முன்பு தமிழர்களுக்கு பரிச்சயப்பட்ட ராமானுஜம் மெஸ்ஸில்-அதாவது உண்டு உறையும் இடத்தில் தங்கி இருந்தேன். அப்போது தமிழ்நாட்டு இளைஞர் ஒருவர் தடபுடலாக தங்கியிருந்தார். சென்னையில் ஒரு பிரபலமான ஒரு டாக்டரின் மகனாம். இவரைச் சுற்றி பத்து பதினைந்து பேர் சூழ்ந்திருப்பார்கள். சிலசமயம் ஒரிரு பெண்களைக்கூட கூட்டி வருவார். இவர் எனக்கு பழக்கமே தவிர நட்பல்ல. ஆனால் என்னிடம் மிகவும் கண்ணியமாகப் பழகுவார்.

நான் தனியறைக்குப் போன பிறகு ஒருநாள் என் அறைக்குள் ஒடி வந்து, ‘என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று கதறினார். ஒரு நிமிடத்திற்குள் ஒரு சர்தார்ஜி இளைஞன் ஒரு தடியோடு ஈட்டிக்காரன் மாதிரி வந்து அந்த இளைஞனை என் கண் முன்னாலேயே அடித்து வெளியே இழுத்தான்.

எனக்கோ இந்தி வராது. அதோடு எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து அடிக்கும் வலிமை கொண்டவன் அவன். ஆனாலும் என்னால் தாள முடியவில்லை. அரைகுறை ஆங்கிலத்தில் “யூ பேஸ்டட் டாக்” என்று சொல்லி ககொண்டு அவன் கையைப் பிடித்தேன். உடனே அவன் நான் இந்த இளைஞன் வாங்கிய கடனுக்கு கேரண்டி கொடுக்க