பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 137

முன் வந்திருப்பதாகக் கருதி சிரித்தான். அதையே இந்தியில் விளக்கமாகக் கேட்டான். உடனே நான் “நோ நோ” என்றேன். பழையபடியும் அந்த இளைஞனை கண்ணத்தில் ரெண்டுபோடு போட்டு வெளியே இழுத்துக் கொண்டு போனான். அவனோ என்னை கையெடுத்துக் கும்பிட்டான்.

எனக்கு மனசு கேட்கவில்லை. அந்த சர்தார்ஜி இளைஞனை அதட்டியபடியே அவன் வீட்டுக்குப் போனேன். அவனும் சிநேகிதமாக சிரித்தபடியே அந்த இளைஞனை ஒன்றும் செய்யப் போவதில்லை என்றும் தெரிவித்தான். என்னையும் வரும்படிக் கேட்டான். இந்த இளைஞன் வாங்கிய ஆயிரக்கணக்கான ரூபாய்க்கான ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். மற்றபடி ஒன்றுமில்லை என்றான். இந்த இளைஞனும் என்னைப் பார்த்துக் கெஞ்சினான். வேறு வழியில்லாமல் நானும் அவனோடு போனேன். ஒரு அறைக்குள் எங்களை உட்கார வைத்தான். நாங்கள் உட்கார்ந்ததுதான் தாமதம்..... உடனே அறைக்கு வெளியே போய் கதவை சாத்தி விட்டான். ஜன்னல் வழியாக எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே, தந்தையைக் கூப்பிடுவதற்காகப், போய்விட்டான்.

எனக்கோ நடுக்கம். அன்று மத்தியானம் நான் செய்தி வாசிக்கவேண்டும். அதுவும் மொழி பெயர்த்து செய்தி வாசிக்க வேண்டும். சில சமயம் செய்தி வாசிக்காத ஒருவர் மொழி பெயர்ப்புக்காக வந்திருப்பார். நான் போகவில்லையானால் நாள், மணி, நேரம் தவறாமல் வரும் செய்தி நின்று போகலாம். வேலையும் கோவிந்தாவாகி விடும். ஒரே குழப்பம். அந்தச் சமயத்தில் நான்கைந்து பெண்கள் எதுவுமே நடக்காதது போல் அங்கே வந்தார்கள். உள்ளே ஒரு டெலிபோன் இருப்பதை அப்போதுதான் பார்த்தேன். உடனே அந்தப் பெண்களிடம் கைகளை அங்குமிங்குமாக ஆட்டி, ஐ கவர்மெண்ட செர்வண்ட், போலீஸ் மே கம்ளைண்ட் ஹே என்று டெலிபோன் ரீசிவரை தூக்கினேன். அந்தப் பெண்கள் பயந்து விட்டார்கள். அப்போது புதுடெல்லியில் போலீஸ் என்றால் எல்லோருக்குமே பயம். உடனே அந்தப் பெண்கள் கதவை திறந்து விட்டார்கள்.

நாங்கள் இருவரும் எடுத்தோம் ஒட்டம். ஒரு கிலோமீட்டர் வரை ஒடிய பிறகு அந்த இளைஞனுக்கு ‘ஆளைவிடு’ என்கிற அர்த்தத்தில் ஒரு கும்பிடு போட்டு விட்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு வானொலி நிலையத்திற்குள் பாய்ந்தேன்.

சென்னை திரும்பல்

நான் சென்னையிலுள்ள வேறு பதவிக்கு திரும்புவதற்கு