பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 44 வேரில் பழுத்த பலா

நெகிழ்த்தியது. இந்த நிறைவோடு ஒய்வு பெறவேண்டும் என்று தீர்மானித்து அவர்களது வேண்டுகோளை நன்றியோடு மறுத்தேன்.

பதவியில் இருப்பவர்கள் எப்போதாவது ஒருநாள் நாற்காலி யை காலி செய்தாக வேண்டும். இதை உணர மறுக்கிறவர்கள் தான் அவதிக்கு ஆளாகிறார்கள்.

அதோடு ஒரு மூத்த அதிகாரியின் நீட்டிப்பு இளைய சகாக்களின் பதவி உயர்வுகளை பாதிக்கும். இதுவும் என் மறுப்பிற்கு ஒரு காரணம். சுருக்கமாகச் சொல்லப்போனால் என் எஞ்சிய வாழ்க்கை நன்னடத்தை ஜாமீனில் விடுதலையாகி உள்ளது. இந்த பதவி ஒய்விற்குப் பிறகு எனக்கு நிற்கக்கூட நேரமில்லை. எழுத்தாளர் பணி.... இலக்கிய பேச்சுப்பணி.... இளைய தோழர்களின் படைப்புகளுக்கு முன்னுரை கொடுக்கும்பணி, கூடவே சும்மாதானா இருக்கீங்க இந்த வேலைய செய்யுங்க என்ற என் மனைவி கொடுக்கும்பணி.... வாழ்நாள் முழுதும் இனிமையான வேலைதான்.

நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்தவன். ஐந்து வயதிற்குள்ளேயே தாய்-தந்தையை இழந்தவன். ஒற்றைப் பையன். என்னுடைய தாய்மாமா தங்கய்யா, சித்தப்பா பாண்டி ஆகியோரின் உதவியால் கல்லூரிப் படிப்பை முடித்தவன். நான் டெல்லிக்குப் போனபோது காலா மதராசிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இப்போதோ எங்குமே ‘டால் அடிக்கும் கறுப்பு மயம். என் நிறத்திற்காக அன்று சிரித்தவர்கள் முகத்தில், இப்போது எந்த இளக்காரமோ ஏளனமோ இல்லை. காலா மதராசிகள் கண்டிப்பானவர்கள் என்பது அவர்களுக்குப் புரிந்து விட்டது.

என்றாலும் இங்கே ஒன்றை நான் சுட்டிக்காட்ட வேண்டும். நான் தங்கியிருந்த ராமானுஜம் மெஸ்ஸுக்கு எதிரே ஒரு பிராமண குடும்பம் இருந்தது. இளந்தம்பதிகள். அவர்கள் என்மீது காட்டிய அன்பு இருக்கிறதே அதை சொல்லியும் தீராது; சொன்னாலும் மாளாது. அந்த சகோதரிக்கு மது என்று ஒரு சகோதரன். என் இனிய தோழன். இப்போது எங்கே இருக்கிறார்களோ? எப்படி இருக்கிறார்களோ? நிச்சயம் நன்றாகத்தான் இருப்பார்கள்.

இறுதியாக, எனது அரசு அலுவலக அனுபவம் இதைத்தான் சொல்கிறது.