பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 உலகம்மை-என் அம்மை

போலீஸ் நிலையத்தில் காத்துக் கிடந்து, வேலைக்குப் புதிதாகையால் இன்னும் கெட்டுப் போகாமல் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து, எங்க அய்யாவ... மாரிமுத்து நாடார் குடுத்த கடனெ சாக்கா வச்சி. கோட்டுக்குள்ள நிறுத்திட்டாரு..... போலீஸ்.... ஏழை மக்களோட துணைவன்னு சொல்லு தாங்களேன்னு இங்க வந்து, இந்த அய்யாகிட்ட சொன்னேன். இந்த அய்யாவும் வந்தாரு.... கோட்டுக்குள் நிறுத்துணவங்கிட்டயே கலர் குடிச்சிட்டு, பட்ட போட்டார்னு என் அய்யாவ, இழுத்துக்கிட்டு வந்துட்டாரு நானும் கேக்குறேன். எங்கய்யா சாராயம் குடிச்சதுக்கும், இந்த போலீஸ் அய்யா, மாரிமுத்தோட கலர் குடிச்சதுக்கும் என்ன வித்தியாசம்? சொல்லுங்க எசமான்?

மாயாண்டி விடுதலை செய்யப்படுகிறார். மாரிமுத்து நாடார் எச்சரிக்கப்படுகிறார். ஆனால் விவகாரம் முடியவில்லை. சப்-இன்ஸ்பெக்டரை, உலகம்மை வச்சிக்கிட்டு இருப்பதாக ஊரில் செய்தி அடிபடுகிறது. ஊர்க்காரர்களை, பொட்டப்பயல்கள் என்று சொன்னதற்காக, ஊர் கூட்டப்பட்டு, உலகம்மைக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதோடு, மாரிமுத்துவின் ஆட்கள் உலகம்மையின் வீட்டைச் சுற்றியுள்ள தத்தம் நிலத்தை, சுவரெழுப்பி அடைக்கிறார்கள். அவளுக்கு இருந்த ஒரே வழியும் அசுத்தம் செய்யப்படுகிறது. இரவில் கூரையில் கற்கள் விழுகின்றன.

உலகம்மை அதிகாரிகளிடமும், பஞ்சாயத்துத் தலைவரிடமும் முறையிடுகிறாள்.

பஞ்சாயத்தின் முன்னால்...

ஊர்க் கூட்டம் கூட்டப்படுகிறது. ஆனால், அவள் புகாரை எடுத்துக் கொள்ளாமல், அவள் சக்திக்கு மீறிய அபராதத் தொகையை ஏன் கட்டவில்லை என்று அங்கு கேட்கப்படுகிறது. ஊராரை, பொட்டப் பயலுக’ என்று முன்பு சொன்னதற்கு, இப்போதும் விளக்கம் கேட்கப்படுகிறது.

உலகம்மை, ஊரில் இருந்து தள்ளி வைக்கப்படுகிறாள். தனிமையில் தவிக்கும் அவள், சேரிக்குச் செல்கிறாள். சேரி ஜனங்கள்-குறிப்பாக பட்டதாரி இளைஞன், அருணாசலத்தின் ஆதரவு கிடைக்கிறது.

தண்ணிர் பிரச்சினையில் உண்ணாவிரதம் இருக்கும் அருணாசலம், அதை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வெற்றியுடன் முடித்துக் கொள்ளும் போது, உலகம்மை அவனுக்கு வாழைப் பழம் கொடுக்கிறாள். ஊர் ப் பிரமுகர்கள் வெகுண்டெழுகிறார்கள்.