பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 159

புரட்சிப் பெண்ணாய்...

உலகம்மை வயலுக்குப் போயிருந்த போது, அவள் வீட்டுக்கு உள்ள ஒரே வழியும் அடைபடப் போகிறது. வீட்டுக்குள்ளேயே சிறைபடப் போகும் நிலையில், மாயாண்டி மன்றாடுகிறார். கதறுகிறார். ஊர் மக்கள் காலில் விழுகிறார். பலனில்லை. இறுதியில் வழி அடைபடும் முன்னே அவர் உயிர் விடை பெறுகிறது.

வீட்டுக்கு வந்த உலகம்மை, கதறுகிறாள். விடிய விடிய அய்யாவை வைத்து அழகு பார்க்கிறாள். மறுநாள் காலையில் பிணத்தைத் தூக்க வந்த ஊர்க்காரர்கள் முன்னால் கண்ணிர் விடுவதே பாவம் என்று கருதி, அழுகையை ஆவேசமாக்கி, ஊராரை உள்ளே விடாமல், தன்னந்தனியாய் பிணத்தைத் தூக்கிக் கொண்டு போய் சேரி ஜனங்களின் ஒத்தாசையுடன் எரிக்கிறாள்.

அருணாசலம் கொள்ளி வைக்கிறான்.

“ஊர்க்காரன் காலுல விழுந்ததுக்காக, நான் திட்டுவேன்னு பயந்து செத்துட்டீரா? என்ன பெத்த அய்யா கோழி மிதிச்சு குஞ்சு சாவாதுன்னா, குஞ்சி மிதிச்சி கோழி சாவுமாய்யா. என்னப்பெத்த அப்யா?”

உலகம்மை கதறுகிறாள்.

சேரியில் சில நாள் இருக்கும் உலகம்மை, ஒரு முடிவுக்கு வந்து விடுகிறாள். மேல் ஜாதியில் இருக்கும் ஏழை பாழைங்களும், ஹரிஜனங்கள் தான். அவங்களும் ஹரிஜனங்களோட சேரனும் என்று நினைத்து, அதற்கு முன் மாதிரியாக நடக்க விரும்பி, கிராமத்திற்கு வந்து, தன் வீட்டு தட்டு முட்டுச் சாமான்களை எடுக்கிறாள்.

‘ஜாதிப் பெண் சேரியில் போயிருப்பதை விரும்பாத ஊர் மக்கள், இப்போது அவளை, அங்கே வரும்படி கெஞ்சுகிறார்கள். பலருக்கு அவளை அளவுக்கு மீற கொடுமைப்படுத்தி விட்ட குற்ற உணர்வும் வருகிறது.

“பறக் குடியில் போய் இருக்காதே! அது உனக்கும் கேவலம். எங்களுக்கும் கேவலம்” என்று சொல்லும் கணக்கப் பிள்ளையைப் பார்த்து உலகம்மை கர்ஜிக்கிறாள்.

“நான் இப்போ பறச்சிதான். அப்படி ஆனதுனால சந்தோஷம் இல்லாமப் போவல. நான் ஒருத்தி போறதால.. மேல் ஜாதி எல்லாம் போயிடுமுன்னா, ஒங்க ஜாதிங்க எவளவு இத்துப் போயிருக்கணும்? என்னைப் பத்திக் கவலைப்படாம ஓங்களைப்