பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 உலகம்மை-என் அம்மை

பத்தி மட்டுமே கவலைப்படுங்க... நான் மேல் ஜாதியில் செத்து, கீழ் ஜாதியில் பொழைச்சிக்கிட்ட பொம்பல!...”

உலகம்மை சேரியில் சேர்கிறாள். ஹரிஜனப் பையன் அருணாசலம் மூலம் நான் சொன்னேன்.

“மேல் ஜாதி ஓழையும், கீழ் ஜாதி ஹரிஜனங்களும் ஒரே வர்க்கமாய் போற கிாலம் வரப்போவது...... நீ சேரியில் சேருற காரியம், எதிர்காலத்தில் ஒருவேளை நடக்கப் போற சமதர்மப் புரட்சிக்கு ஒரு காரணமாய் அமையலாம்.”

உலகம்மையை வெறும் வீரப் பெண்ணாக-உணர்ச்சிகளை ஒடுக்குகிறவளாக மட்டும் நான் சித்தரிக்கவில்லை. அவளின் மென்மையான உணர்வுகளையும் காட்டியிருக்கிறேன்.

லோகுவிடம், ஆள் மாறாட்டத்தைச் சொல்லப் போகிறவள், அவன் மாரிமுத்து நாடார் மகள் சரோஜாவை மணந்து கொள்ள வேண்டும் என்று வாதாடுகிறாள். அவன் இளநீர் சாப்பிடச் செல்லும்போது, “சாப்பிட்டால் சரோஜாக்கா கூடத்தான் சாப்பிடுவேன்” என்கிறாள்.

லோகு பஸ் நிலையத்தில் அவளைப் பார்த்து, இதுதான் கடைசி பஸ். போகட்டுமா? என்று சொல்லிவிட்டு, அவன் போனபோது ‘கடைசி பஸ்ஸா... கடைசி சந்திப்பா என்று தனக்குள்ளேயே மருகுகிறாள்.

சரோஜாவுக்கு, வேறொரு இடத்தில் திருமணமானதும் லோகுவை அல்லும் பகலும் நினைக்கிறாள். வக்கீல் நோட்டீஸை, அவன் எழுதிய காதல் கடிதமாகக் கூட நினைத்துப் படிக்கிறாள்.

ஒர் ஏழைப் பெண்-அதுவும் இளம்பெண், ஊரை எதிர்த்து தன்னந்தனியாகப் போராட முடியுமா? என்று சில விமர்சகர்கள்-அதுவும் கண்ணகி மதுரையை எரித்ததை நம்புகிறவர்கள்-கேட்டார்கள். உலகம்மையைப் போன்று, பல பெண்கள் குக் கிராமங்களில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஊரில் முக்கால் வாசிப் பேர் ஏழை எளியவர்கள். இவர்கள், உள்ளுர, உலகம்மை மீது அனுதாபம் கொண்டாலும், வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாதவர்கள் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன். அதோடு காலம் மாறி, சமூக அமைப்பு மாறுதலுக்குட்பட்டு வருகிறது.

இந்த நிலைமை, இயல்பிலேயே வீரமுள்ள பெண்கள், நியாயத்திற்குப் போராட களம் அமைத்துக் கொடுக்கிறது. இது