பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் } 67

இப்படி அசிங்கமாக போய்விட்டது நவீனத்தமிழ் இலக்கிய உலகம். இதனால் சாகித்ய அகாதமியின் பரிசுக்கான தமிழ்மொழியின் உயர்குழுவில் தேர்வுக்கு வந்த சிற்பியின் கவிதைகளுக்கோ, ஈரோடு தமிழன்பனின் படைப்புகளுக்கோ, அல்லது கு. சின்னப்ப பாரதியின் பவளாயி’ நாவலுக்கோ கிடைக்கவேண்டிய விருது கிடைக்காமலே போய்விடுகிறது. இத்தகைய இலக்கிய தகிடுதத்தங்களில் தகுதிக்குரிய எழுத்தாளர், பதிவுபெறாமல் போவதில் ஆச்சரியமில்லை.

இதேபோல் பல எழுத்தாளர்களை தனது பத்திரிகைகள் மூலம், கைதுக்கி விட்டு பல்வேறு படைப்புகளை உருவாக்கிய நாரணத்துரைக் கண்ணன் விடுபடப்படுகிறார். சிற்றிலக்கிய சொற்பொழிவுகளில் மாமணியின் முகம் பத்திரிகையும், பொன்னடியானின் கவிதைச்சரமும், கவிஞர் செங்குட்டுவனின் கவிக்கொண்டலும், மூவேந்தர் முத்தும், வா.மு. சேதுராமனின் தமிழ்ப்பணியும் விடுபட்டுப்போகின்றன.

ஒரு படைப்பைத் தீர்மானிப்பது கால மேயன்றி, ஆய்வாளர்கள் அல்ல. இந்த “ஆய்வுக் காலன்களை நினைக்கும் போதெல்லாம் எனக்கு பாரதி பாடலே நினைவுக்கு வருகிறது.

‘காலா! இங்கே வா! உன்னை காலால் உதைக்கிறேன்

புதிய கட்டுரை - 1999.