பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 திராவிட இயக்கப் படைப்பாளிகள்

சில முன்னுரைகளில், தமிழில் சிறந்த சிறுகதைகள் எழுதுவோர் என்ற பெயர்ப் பட்டியலில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, டி.கே. சீனிவாசன், கே.ஜி. இராதாமணாளன் போன்ற பெயர்கள் குறிக்கப்பட்டிருப்பினும், அவர்களில் எந்த ஒருவரின் கதையும் அந்தத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கவில்லை” என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அப்போதைய போக்கு இப்போதும் நீடிப்பதற்கு இந்த திராவிட இயக்க மும் ஒரு காரணம். இவர்களும் அழகிரிசாமியையோ, புதுமைப்பித்தனையோ, வல்லி க்கண்ணனையோ கண்டு கொண்டதில்லை. இந்தப் பாரம்பரியம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகையால் சிந்தனையாளர் புகழேந்தி திராவிட இயக்கப் படைப்பாளிகள் விடுபட்டுப் போனதற்கு வருத்தப்படுவதில் தவறில்லை.

காவியமான கோமதி

புகழேந்தி தொகுத்த அண்ணா வழிச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பு, மிகச் சிறப்பானது. பாமர மக்கள், பாட்டாளி மக்கள் ஆகியோரின் பழக்க வழக்கங்களையும், அழகுறச் சித்தரித்திருக்கிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இத்தொகுப்பில் சிறந்த கதைகளில் ஒன்றாக எனக்குத் தோன்றுவது திருவனந்தபுரத்தில் வசிக்கும் எழுத்தாளர் ஆ. மாதவன் எழுதிய கோமதி’ என்ற சிறுகதை. இவர் எப்படி அண்ணா வழியில் வந்த திராவிட இயக்கக்காரர், என்பது புதிராக உள்ளது.

ஆனாலும், நல்ல கறுப்பியான-மதமதத்த உடம்புக்காரி, கோமதி என்ற பசு, கோட்டை நகர பஸ் நிலையம், அரசமரத்தடி ஆகிய இடங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தது என்பதையும், கண்டன் வாகவும், ஜாலி மணியனும், தலைக்கட்டு வேலப்பனும், இதனோடு எப்படி குதுாகலித்தார்கள் என்பதும் செம்மையாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களின் இந்த ‘இஷ்ட தோழியை மலடு என்பதற்காக வீட்டை விட்டு தள்ளி வைத்த ஒரு பிராமணரைப் பற்றியும், அவரது மனிதநேயத்தைப் பற்றியும் (பசுவைக் கசாப்புக் கடைக்குக் கொடுக்காமலிருப்பது ஒரு மனித நேயம் தானே) மாதவன் அழகுறச் சொல்கிறார். இறுதியில், கோமதியால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை அறிந்த கார்ப்பரேஷன்காரர் அதைச் சுற்றி வளைக்கும்போது, கோமதி, கால்களை வெட்டி, வாயில் நுரை தள்ள வைத்து செத்துப்போனது போல் ஒரு பாவலா செய்துவிட்டு, பிறகு எல்லோரும் அசட்டையாக இருந்தபோது, ஜாலி மணியுடன் ஒரேயடியாய் ஒட்டம் போட்டதையும் “யாரப்பா பிடிங்க அந்த தந்திரக்கார மூதேவியை"