பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 171

என்று மற்றவர்கள் இயலாமல் கத்துவதையும் இந்தக் கதை ஒரு காவியம் போல் சித்தரிக்கிறது.

இந்தத் தொகுப்பின் முதல் கதை “சொல்வதை எழுதேண்டா” என்ற அண்ணாவின் கதை. ராகவாச்சாரி, திவான் பகதூர் தீர்த்தகிரி முதலியாருக்கு, அவரைப் பாராட்டி எழுதிய ஒரு கடிதமும், தனது மகனுக்கு, திவான் பகதூரை திட்டித் தீர்த்து எழுதிய கடிதமும், இருவருக்கும் இடம் மாறிப்போனதால் ஏற்பட்ட பிரச்சினையை அங்கத பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். திவான் பகதுருக்கு, தனது மைத்துணியை இஸ்கு தொஸ்காகக் கொடுத்த ராகவாச்சாரியார், அவளையே ஒரு பகடைக் காயாக்கி, அவளிடம் திவான் பகதூர் தவறாக நடந்து கொண்டார் என்று பத்திரிகைகளில் அறிக்கைகள் கொடுக்கிறார் என்று கதை முடிகிறது. இந்தக் கதையை எந்தவித இழிவும் இல்லாமல் மிக யதார்த்தமாக எல்லோருக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார், அண்ணா.

பல்மொழி கண்ட குப்பைத்தொட்டி

கலைஞரின் குப்பைத் தொட்டி என்ற கதை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சுமாராகத்தான் தெரிந்தது. இப்போது நவீனத்துவம், பின்நவீனத்துவம், மேஜீக்கல் ரியலிசம், அமைப்பியல் போன்ற இலக்கிய இசங்கள் பிரபலமான இந்தக் காலக்கட்டத்தில் இதன் மறுவாசிப்பு பிரமிக்க வைக்கிறது. ஒது குப்பைத் தொட்டி மூலம் சொல்வதுபோல் கலைஞர் சமுதாயத்தை விமர்சிப்பது மேஜீக்கல் ரியலிசத்திற்கு எடுத்துக்காட்டான கதை. இதனால் இது இடதுசாரி இலக்கிய இதழான செம்மலரில் சிகரங்களைத் தொட்ட சிறுகதை வரிசையில் பிரசுரிக்கப்பட்டது. தோழர் கு. சின்னப்பப்பாரதியை ஆசிரியராகக் கொண்ட, IA’ என்ற மும்மாத இதழில் மொழி பெயர்க்கப்பட்டது. எனது ‘வாடாமல்லிக்கான ஆதித்தனார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலைஞரோடு மேடையை பகிர்ந்துகொண்ட நான் இந்தக் குப்பைத்தொட்டி பற்றி குறிப்பிட்டேன். உடனே, கலைஞர் தனது இறுதி உரையில், குப்பைத் தொட்டி இங்கே குட்டைத்தொட்டியாக ஒதுக்கப்பட்டாலும் பிற மொழிகள்ல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று இங்கே நிலவும் இலக்கிய போலித் தனங்களை தோலுரித்துக் காட்டினார்.

‘உங்களைப் போன்ற ஒரு மனிதாபிமானியைப் பார்க்கவே முடியாது’ என்று நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவரால் போற்றப்பட்ட இரா. செழியன் ராஜாதி ராஜா என்ற சிறுகதையை எழுதியிருப்பது எனக்குப் பெருத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.