பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 படைப்பாளியும் தாய்மொழியும்

படைப்பு இலக்கியமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தக் கருத்தரங்கில் தலைமைவகித்துப் பேசிய அமைச்சரும் முனைவருமான தமிழ்க் குடிமகன், இதே தொல்காப்பிய விவகாரத்தைச் சுட்டிக் காட்டி, ஆணவ எழுத்தாளர்களை புறக் கணிக்க வேண்டும் என்றும், ப ைட ப் பாளி களு க் கு அ ங் கீ கா ர ம் அளிப் ப தே தமிழாசிரியர்கள்தான் என்றும், சக ஆசிரியர்களுக்கு அடி’ எடுத்துக் கொடுத்திருக்கிறார். தமிழ் வாக்கியங்களில் ஆங்காங்கே அடைப்புக்குறி இல்லாமல் ஒரு தடவிழ் வார்த்தை போலவே ஆங்கிலத்தை ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதுவதும், தலைப்புகளுக்கே ஆங்கில பெயரிடுவதும், ப்,க் போன்ற ஒற்றெழுத்துக் களை முதலெழுத்துக் களாக வைத்து ப் பெயர்சூட்டிக் கொள்வதும் இதேமாதிரி வாக்கியங்களைத் துவக்குவதும் பல எழுத்தாளர்களுக்கு ஒரு பாணியாகி விட்ட சூழலில், தமிழாசிரியர்களின் சினம் நியாயமானதே.

படைப்பிலக்கியமும், தொல்காப்பியமும்

சம்பந்தப் பட்ட எழுத்தாளர், தமிழ்ப் புலமையால் படைப்பிலக்கியம் ஆக்க முடியாது என்ற தொனியில் கருத்து தெரிவித்து இருக்கலாம். தொல்காப்பியம் படித்துவிட்டுத்தான் ஒருவர் படைப்பிலக்கியம் செய்ய வேண்டியதுமில்லை. இது வற்புறுத்தப்பட்டால், பெரும்பாலான படைப் பாளிகள் மி ஞ் சமாட்டார்கள். அதே சமயம் ஒரு எழுத்தாளர், படைப்பாளியாய் பரிமாணப்பட்டு, நாடறிந்த படைப்பாளியாகி, அவரது கருத்துக்களை சமுதாயம் உன்னிப்பாக செவிமடுக்கும் நிலைமை ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட படைப்பாளி, தொல்காபியம் போன்ற நமது முன்னோர்களின் மூலநூல்களை படிக்கவேண்டும். - இயலாதுபோனால் குறைந்தது அவைபற்றிய கட்டுரைகளையாவது படிக்க வேண்டும். தொல்+காப்பு+இயம் என்று பிரித்துப் பார்த்தால், பழமைமையைக் காத்து இயம்பும் நூல் தொல்காப்பியம் எனப்படும். இப்படிப் பட்ட நூல்களைப் படித்தால்தான், இன்றைய படைப்புக்களையும் கட்டிக் காக்க வேண்டுமென்று எதிர்கால சந்ததியினர் நினைப்பார்கள். எனவே இது எழுத்தாளனின் படிப்பாளித்தனத்தைப் பற்றியது அல்ல. அவன் தன் தாய்மொழி மூலம் தனது தொன்மங்களை எப்படி நேசிக்கிறான் அல்லது பார்க்கிறான் என்பது சம்பந்தப்பட்ட இன்றைய தேவை.

தொல்காப்பியம் போன்ற நமது முன்னோர் நூல்கள் படைப்பாளிகளால் அலட்சியப் படுத்தக் கூடியவை அல்ல.