பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 படைப்பாளியும் தாய்மொழியும்

நமது தேசியக் கொடி, வெறும் துணியினால் ஆனதுதான். ஆனாலும் அது புனிதமாகப் போற்றப் படுகிறது. அது கிழித்துப் போடப்பட்டாலோ அல்லது அவமரியாதை செய்யப்பட்டாலோ விளைவுகள் விபரீதங்களாகும். மொழி என்பதும் அந்தத் துணியைப் போல் எழுத்துக்களால் ஆனதாக இருக்கலாம். ஆனாலும் தேசியக்கொடியைப் போல் இதுவும் புனிதமானது. இன்னும் ஒருபடி அதிகமானது.

மூதாதையர் வழியான பதிவுகள்

அதோடு, தாய் மொழி என்பது, உடல் - உயிர் தொடர்புடையது. நமது உடம்பில் உள்ள கோடிக் கணக்கான செல்கள் ஒவ்வொன்றிலும், ஜீன் என்ற ஒரு சின்னஞ்சிறு திரள் உள்ளது. இது, இன்றைய கணிப்பொறியில் உள்ள சிலி க்கான் மாதிரியானது. நமது முப்பாட்டன் உள்ளிட்ட முன்னோர்களின் துயரங்கள், துக்கங்கள், வெற்றிப் பெருமிதங்கள் முதலிய அத்தனை உணர்வுகளும் நமது ஜீன்களில் பதிவாகி உள்ளன. இந்தப் பதிவுகளின் அடிப்படையில் இப்போதையப் பதிவுகளையும் உள்வாங்கி நாம் செயல்படுகிறோம் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை. நமது முன்னோர்கள், மனதளவில் எந்த மொழியில் குதுாகலித்தார்களோ அல்லது குமுறினார் களோ - அத்தனை உணர்வுகளும், அதே மொழியில் நமது ஜீன்களில் பதிவாகி உள்ளன. இத்தகைய பல்லாயிரத்தாண்டு தலைமுறைவழி தாய்மொழியை அது எந்த மொழியாக இருந்தாலும், இதைப் புறக்கணிக்கும் அந்த மொழி எழுத்தாளன் சமூகத்திற்கு பயன்படமாட்டான். தாயை, அவளது சகலவித பலத்தோடும் பலவீனத்தோடும் நேசிக்கா தவன் தான், தன் மொழியை நேசிக்க மாட்டான். இப்படிப்பட்ட எழுத்தாளனின் படைப்புக்களும் சமூகத்தால் ஒதுக்கப்படும். காரணம் இவர்களது எழுத்தில் தார்மீகக் கோபமோ, உரிமைத்தனமான சாடலோ, மனிதநேயமோ இல்லாமல், போலித்தனமும், வியாபாரத்தனமான புதுமைகளுமே மிஞ்சி நிற்கும்.

தமிழ்ப்பற்றாள கவிஞர்கள்

தமிழின் அனைத்து வகை இலக்கியத்திலும் தடம் பதித்தவர்கள் தாய் மொழியான தமிழ் மொழியைப் போற்றியிருப்பதைப் பார்க்கலாம். புறநானுற்றில் தமிழ்கெழு கூடல்’ என்று மொழிவளம் சுட்டிக் காட்டப் படுகிறது. சைவத்தின் அடிநாதமான திருமந்திரத்தில் - ஈசனோடாயினும் ஆசையறுக்க வேண்டும் என்று இயம்பிய பற்றற்ற ஞானியான