பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 43

அதிகார பிச்சைக்காரர்கள்

ஒரு துரும்பை தூக்கிப் போட்டு நீதான் மாப்பிள்ளை’ என்று சொன்னால், அது கூட துள்ளும் என்ற ஒரு சொல்லடை உண்டு. இது அரசில் பணியாற்றும் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் பொருந்தும். இவர்கள் அதிகாரப் பிச்சைக்காரர்கள். தங்கள் கரங்களை, கொடுக்கிற கரங்களுக்கு மேலே கொண்டு போகிறவர்கள். ஒரு சாதாரணக் குடிமகன் வேறு வழியில்லாமல் கொடுக்கும் லஞ்சப் பணத்தை ஒரு கப்பமாகவே கருதும் குட்டி மன்னர்கள். இவர்களுக்கு கொடுக்கும் கையூட்டுப் பணத்தையாவது காலப்போக்கில் மறந்து விடலாம். ஆனால், இவர்கள் சராசரி மக்களை நடத்தும் விதம், இருக்கிறதே அது நாம் பெற்றதாகக் கூறப்படும் விடுதலைக்கே களங்கமானது.

சில சமயங்களில் இவர்களின் மமதை பெரிய மனிதர்களையும் இழிவு படுத்தும். சங்கீத விமர்சகர் பெரியவர் சுப்புடு அவர்களின் தம்பியும், அகில இந்திய வானொலி க்கும்-தொலைக்காட்சிக்கும் தலைமை இயக்குனராக பணியாற்றியவருமான திரு பி.வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், நான்கைந்தாண்டுகளுக்கு முன்பு, என்னிடம் தொலைபேசியில் என் உதவியை நாடினார். தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தில் அவர் வசித்த குடியிருப்பில் அந்த வாரியத்தின் ஒரு கிளார்க்கே தீர்த்து வைக்க வேண்டிய சின்னஞ் சிறு பிரச்சினை. இதற்கு என் உதவியை நாடினார். உடனே, நான், உங்களை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலே, அந்த கிளார்க் அலறியடித்து உதவுவாரே என்றேன். இதற்கு, அவர் ‘அதுதாம்ப்பா இல்லை. என்னை அந்த கிளார்க்குகிட்ட அறிமுகம் செய்துகிட்டேன். ஆனாலும் He retuses even to look at me என்றார். அதாவது அந்த கிளார்க் அவரை ஏறிட்டுக்கூடப் பார்க்க விரும்பவில்லையாம். சம்பந்தப்பட்ட கிளார்க்கைப் போல் எல்லா கிளார்க்குகளும் உயர் பதவி வகித்தவர்களிடம் இப்படி மிகையாக நடந்து கொள்ளு வதில்லைதான். ஆனால், சாதாரண மக்கள் என்று பார்க்கும் போது அவர்களை இவர்கள் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். அப்படியே பார்த்தால், அந்த மக்களைத் திட்டுவதற்காகத்தான் இருக்கும். மேலதிகாரியின் காலைப்பிடித்துக் கொண்டு சராசரி மக்களின் தலையில் கால் பதிக்கும் மனோபாவிகள் இவர்கள்.

எனது அனுபவக் கொடுமை இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம் அண்மையில்