பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 செல்லரிக்கும் கரையான்கள்

ஏற்பட்டது. பண்டிகைக் கால நெரிசலை கருத்தில் கொண்டு, வேலூரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருவள்ளுவர் பேருந்தில் பயணச்சீட்டை பதிவு செய்யும்படி என் உறவினரை அனுப்பியிருந்தேன். அவர், அந்தச் சீட்டை இன்னொருத்தர் மூலம் கொடுத்தனுப்பினார். சென்னையிலுள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்குச் சென்றால் அந்த எண்ணுக் குரிய பேருந்தை கால் மணி நேரம் தேடியும் அது கண்ணில் படவில்லை. போதாக்குறைக்கு நான் மூக்குக் கண்ணாடி போட மறந்துவிட்டேன். அதாவது நான் ஒரு தாற்காலிக கைநாட்டு. அந்த பேருந்து நிலைய அதிகாரிகளிடம் பயன்ச்சீட்டைக் காட்டினேன். அதை ஏனோதானோ என்று வாங்கியபடியே இந்த பஸ் இங்கே கிடையாது’ என்றார்கள் அப்படியானால் எங்கே என்று பயபக்தியோடு கேட்டேன். ‘எங்களுக்குத் தெரியாது அவ்வளவுதான் என்று கத்தினார்கள் நல்ல வேளை, பயணச் சீட்டை கிழிக்காமல் கொடுத்தார்கள்.

உடனே நான், அந்த வளாகத்திற்கு வெளியேவந்து வரிசைவரிசையாக நின்ற பேருந்துகளைப் பார்த்தேன். என் பேருந்து தட்டுப்படவில்லை. நாமக்கல்லுக்குப் போகும் பேருந்து ஒட்டுநரிடம், பயணச்சீட்டை நீட்டி விபரம் கேட்டேன் அவர் ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. நான் திருப்பிக் கேட்டேன் அட போய்யா இதெல்லாம் தெரியாம எதுக்காக வெளியூர் போறே? என்று அடிக்காத குறையாகக் கூச்சல் போட்டார். நான் விக்கித்து வெலவெலத்துப் போனேன். ஏதோ ஒரு புண்ணியவான் (இந்த சராசரி உதவிகூட புண்ணியமாகக் கருதப்பட வேண்டிய சூழல்) பயணச்சீட்டைப் பார்த்துவிட்டு, என்னை பழையபேருந்து நிலையத்திற்குப் போகச் சொன்னார். திருவள்ளுவர் பேருந்து தான் என்று திட்டவட்டமாக நம்பியது என் தறுைதான். இருபதாண்டு காலமாக அரசாங்க காரிலேயே பயண்ம் செய்த எனக்கு, ஒரு முன்னாள் அதிகாரி என்ற முறையிலும், ஒரு எழுத்தாளர் என்ற முறையிலும் இந்த கர்வபங்கம் தேவைதான். ஆனால் தப்பு செய்வதற்குக்கூட தகுதியற்ற சாதாரண மக்களிடம் அரசு அலுவலர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.

எளிய மக்கள் பயப்படுவது ஏன்?

இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டாகவேண்டும். சென்னையிலுள்ள ஒரு நியாயவிலைக் கடை. அந்தக் கடைக்கு எச்சரிக்கையான இடைவெளி கொடுத்து நின்றபடியே, ஒரு நடுத்தரவயது சேரிப் பெண் கூடையும் அரிசியுமாக புலம்பிக் கொண்டிருந்தாள். விசாரித்துப் பார்த்ததில், அவளுக்குக்