பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 செல்லரிக்கும் கரையான்கள்

ஆட்டோரிக்ஷாவில் இருந்து ஆகாயவிமானம் வரை லஞ்சக்கூத்து நடைபெறும்போது, அரசு ஊழியர்களை மட்டும் தனிப்படுத்தி சுட்டிக்காட்டலாமா என்ற ஒரு நியாயமான கேள்வி எழுகிறது. மேல்மட்ட அதிகாரிகளும், கொள்ளைக்காரத் தலைவர்களும் சுரண்டுவதில், கோடி ரூபாய்க்கு கீழே அவர்கள் சிந்திக்காதபோது வெறும் நூறு, இருநூறு ருபாய் அளவில் வாங்கும் ஊழியர் செயல்பாட்டை ஒரு பொருட்டாக கருதவேண்டுமா? என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது. என்றாலும், இது வெறும் எளிய கையூட்டுப் பிரச்சினை அல்ல. ஆணவப் பிரச்சின்ை, சாதாரண மக்களிடம் தோழமையுடன் பழகவேண்டியவர்கள் கடமையை செய்வதற்கே காசு கேட்கும் பிரச்சினை. ஏழைகளை கிள்ளுக் கீரைகளாக நினைக்கும் ஜனநாயகப் பிரச்சினை. செத்துப் போன பிரபுத்துவத்தின் மீட்பு. ஆகையால் சாதாரண மக்களுக்கு சுயமரியாதையை கொடுப்பதற்கு இந்தக் கீழ்மட்ட ஊழலையும், கிறுக்குத்தனமான மமதையும் நீக்கியாகவேண்டும்

என்றாலும், மேல்மட்ட ஊழல் பேர்வழிகள் சிறைக்குப் போக வேண்டியவர்கள். கீழ்மட்ட ஊழியர்கள் சீர்திருத்தத்திற்கு உட்பட வேண்டிய வர்கள். வெளியே வெள்ளை யும் சொள்ளையுமாய் தோன்றினாலும் இவர்களும் ஒரு மனோ அடிமைகள்தான். இந்த நாட்டில் அரசு நிர்வாகம் ஜனநாயகப் படுத்தப்படவில்லை. ஒரு சராசரி துக்கடா அதிகாரியைக்கூட அவரது பதவியை பெயர்ச் சொல்லாக்கியே பேசவேண்டும் அதாவது ஒரு தாசில்தாரிடம் தாசில்தார் போகச்சொன்னால் போறேன் என்றே பேசவேண்டும் நீங்க சொன்னால் போகிறேன் என்று பேசமுடியாது. ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதும்போது கூட நான் கெஞ்சிக்கேட்டுக் கொள்ளுவதெல்லாம் (l beg to submit) என்றே எழுதவேண்டும். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு கான்ஸ்டபிளிடம் பேசும் சராசரி வார்த்தை ‘ஏண்டா நாயே என்பதுதான். ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டருக்கு தண்ணிர் கொடுக்காமல், என்னிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த என் உறவினரான ஒரு காவலர் பலர் முன்னிலையில் வாங்கிய வார்த்தைதான் நான் மேலே குறிப்பிட்டது.

கடைசியர்கள்

இத்தகைய புதிய வர்ணாஸ்திர அரசின் அடுக்கடுக்கான அதிகார வர்க்கத்தில் வைசியர்களும், சூத்திரர்களுமான