பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 போராளித் துறவி சாலய்யார்...

குடியிருந்தார். இப்படி குடியிருப்புகளை வாடகைக்கு விட்ட எம்.பி.க்களை கண்டித்தும் கட்டுரை எழுதினார். அண்ணா உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும், டில்லிக்கு வந்தால் அவரைப் பார்க்காமல் சென்றதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அவரது மாணவர்கள். இப்படி, சமூகத் தலைமை கொண்ட பலருடன் பேசுவதற்கே நேரமில்லாமல் இருந்த சாலய்யார், என்னையும் அவர்களுக்கு இணையாகவே நடத்துவார். என்னை மட்டுமல்ல, டில்லி மாநகரில் படிக்காத பாமரத் தமிழர்களிடமும்கூட, படிப்பாளிகளிடம் எப்படி நடந்து கொள்வாரோ, அப்படியே நடந்து கொள்வார்.

தொழில் ரகசியம்

நானும், ஒய்வு கிடைக்கும் போதெல்லாம், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில், அவரது வீட்டிற்குச் செல்வேன். அரிசியில்லாச் சாப்பாடு அதிகாரப் பூர்வமாக செயல்பட்ட சமயத்தில், சாலய்யார் வீடு எனக்கு ஒரு பசியாற்றும் தளமாக விளங்கியது. சாலய்யாருடனும், அவரது துணைவியார் சாலினியுடனும், நான் பணியில் படுத்தப்படும் பாட்டை, அழாக்குறையாகத் தெரிவித்ததுண்டு. அப்போது, சாலினி அவர்கள், ஒரு தாய்மைப் பார்வை வீசுவார். சாலய்யார் ஒரு கோபப் பார்வை வீசுவார். எனது இன்னல்கள் தொடர்வதைக் கண்ட அவர், ஒரு நாள், ஒரு தொழில் ரகசியத்தையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில், விளம்பரக் கண்காட்சித் துறையில், சிறிதுகாலம் தாம் பணியாற்றியதைச் சுட்டிக் காட்டி, அங்கே, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தான் கொடுத்தப் பதிலடியை எனக்கு விலாவாரியாக விளக்கினார். இதனை நானும் பயன்படுத்தத் துவங்கியதில் இருந்து, எனது இன்னல்கள் ஒரேயடியாகப் போயின. என்னுள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை போயிற்று.

தில்லிப் பெருநகரில், இப்போது எப்படியோ, அப்போது - அதாவது முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சிவுப்புத் தமிழர்களும், கறுப்புத் தமிழர்களும், எண்ணெயும் நீறுமாகவே இருந்தார்கள். மண்வாசனைத் தமிழர்கள், தந்தைப் பெரியாரின் தீவிரப் பணியாலும், பெருந்தலைவர் காமராசரின் அரசுத் தலைமையாலும், அப்போதுதான் சிறிது சிறிதாக, தில்லியில் காலூன்றிய காலம். இவர்கள் அத்தனைப் பேருக்கும், சாலய்யார் அவர்களே தலைவராகவும், முன்மாதிரியாகவும் விளங்கினார். இதை, மனதில் கொண்டோ என்னவோ, சிவப்புத் தமிழர்களைக் கொண்ட தில்லித் தமிழ்ச்சங்கம், நமது பேராசிரியரின் தலைமையை