பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 71

உதாரணம். இப்போதைய தமிழறிஞர்களிலே உன்னைவிட வேகமாக சிந்திப்பவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். உதாரணத்துக்கு காலஞ்சென்ற இலங்கைத் தமிழறிஞர் கைலாசபதி. நெல்லைத் தமிழறிஞர் வானமாமலை. இன்னும் நம்மிடையே வாழும் பேராசிரியர்கள் சிவத்தம்பி. சாலப் இளந்திரையன். முகவை. ராசமாணிக்கம்...”

அந்த நாவலில் தமிழாசிரியரான சோமய்யா, தனது துணைவியாருடன் தில்லிப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவர். கோடை விடுமுறைகளில் தமிழகம் முழுவதும், பகுத்தறிவு அடிப்படையில் இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்துபவர். இந்த சோமய்யா பாத்திரத்தையும், சாலய்யாரையும், சாலினியையும் மனதில் வைத்தே எழுதினேன்.

சமூகக் காரணங்களுக்காக சாலப்யார் அவர்களோடு நான் தொடர்பற்றிருந்த காலக்கட்டத்தில், எழுதப்பட்ட நாவல் இது. அப்படி எழுதியதாக நான் அவரிடம் தெரிவிக்கவும் இல்லை. ஆனாலும் அந்த நாவல் அவரது பார்வைக்குச் சென்றுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் சாலய்யாரை சந்திக்கும்போது, இந்த நாவலில் அவரை நான் குறிப்பிட்டதற்காக சிறிது நெகிழ்ந்து போனார். இப்படிச் சொல்வதால், நான் அவருக்கு ஏதோ சலுகை வழங்கியதாகக் கூறவில்லை. இன்றையக் காலக்கட்டத்தில் மண்வாசனைப் படைப்பாளிகளுக்கும், தமிழாசிரியர்களுக்கும் பொதுவாக தொடர்போ, அல்லது இலக்கியப் பரிமாற்றமோ அதிகமாக இல்லை. ஆனால் சாலய்யார் பழமை இலக்கியத்தையும், நவீன இலக்கியத்தையும் நன்கு அறிந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழாசிரியர்கள் இடையே சுயமரியாதையைக் கொடுத்த ஒருசில பேராசிரியர்களில் ஒருவர், சாலய்யார். அவரது முன்மாதிரி நோக்காலும், போக்காலும், தமிழாசிரியர்கள் புதுமைச் சிந்தனையாளர்களாகவும், சமூகப் போராளிகளாகவும் விளங்குகிறார்கள். சாலய்யார் போன்றவர்கள் நட்ட வித்துக்களே இப்படிப்பட்ட விளைச்சலாகப் பெருகியுள்ளது.

புகழ் மறுத்த துறவிப் போராளி

சாலப்யார் சிறிது விட்டுக்கொடுத்திருந்தால், அவரது தகுதிக்குரிய பல்கலைக் கழகத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பொறுப்புகள் அவருக்கு வந்திருக்கும். ஆனாலும் மெய்ப்பொருள் என்பது பதவியை விட மேலானது என்று திட்டவட்டமாகக் கருதியவர், கடைபிடித்தவர். எந்தப் பதவியும், மனிதப்பதவிக்கு மேலானதல்ல என்று உறுதியுடன் நம்பியவர். ஆகையால் அருகில் தோன்றிய பொறுப்புக்கான