பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 83

கற்பனையோடு, நான் லால் பாக்கைச் சுற்றிவிட்டு, அலுவலகம் திரும்பியபோது, வங்காளி செளகிதார், தனது ஆங்கிலத்தை என்னிடம் பரீட்சித்தார்.

ot

சார். மதர் டெலிபோன்ஸ்...”

“யூ வாண்ட் பெர்மிஷன்?” “நோ ஸார். மதர். டெலிபோன்ஸ்...”

“யுவர் மதர்...?”

“நோ ஸார். அவர் மதர்.” “க்யா ஹலோ. மை மதர் ட்ைய்ட்...!” “மை மதர் ஆல்லோ டைய்ட். பட் மதர் டெலிபோன்.”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. செளக்கிதார் கிழவர், நான் பார்த்த பார்வையில், தனக்கு குல்பர்க்காவுக்கு டிரான்ஸ்பர் கிடைக்குமோ என்று பயந்து பார்த்தபோது, ஒரு டெலிபோன் கால். என் மனைவியின் குரல். “இந்த அநியாயத்தைக் கேளுங்க. நம்ம நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் இரண்டு பேரை, திருவான்மியூர் போலீஸார் பிடித்துக் கொண்டுபோய் விட்டார்கள்.”

நீக்ரோ மாணவர்கள் வீட்டில் நடந்த ஏதோ ஒரு திருட்டுக்கு, இவர்களைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருக்கிறார்களாம். நமது போலீசாரின் சர்வதேச அபிமானத்தால், இரண்டு தொழிலாளர்கள் லாக்கப்பில் இருக்கிறார்களாம். ஒங்களுக்கு இன்புளுயன்ஸ் இருக்குன்னு பெரிசாப் பேசுவீங்களே. அதை இப்போ காட்டுங்க..” என்ற முடிவுரையுடன், என் மனைவி என்னை முடுக்கிவிட்டார்.

எனக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் முறையிட்டேன். எந்த ஏரியாவைச் சேர்ந்த அதிகாரி மேற்படி கேஸ்-க்கு உதவுவார் என்பதைக் கண்டுபிடிக்கவே என் கிராப்பில் பாதி பிய்ந்துவிட்டது.

மாலையில், என் மனைவி டெலிபோன் செய்தார். பிடிபட்ட தொழிலாளர்கள் விடுதலையாகி விட்டார்களாம். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் எந்த வீடு கட்டும்போதும் இந்த அநியாயம் நடக்கல. இந்த நிலத்துக்கு வந்தபிறகுதான் இப்படி” என்று சொல்லிவிட்டு, அவர்களைத் தடுத்துவிட்டார்களாம். ஆக மொத்தத்தில், வேறு ஆட்களைப் பார்த்துத்தான் வீட்டு வேலையைத் துவங்க வேண்டுமாம்.

மார்ச் மாதம் முடிந்த பிறகுதான், அடுத்த செட் தொழிலாளர்கள் மார்ச்சாகி வந்தார்கள். கட்டிடச் கவர் நிலத்திற்கு