பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 87

சுட்டிக் காட்டி, ஒரு மாதத்தில் மூன்றாவது தவணை என்ற திருத்தம் வந்துவிடும் என்றும், அப்படி வந்தவுடனே, எனக்கு பணத்தை அனுப்பிவிட வேண்டும் என்றும் வேண்டினேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, நான் காட்டிய காகிதத்தில், இரண்டாவது தவணை என்ற ஆங்கில வாசகத்தை அடித்துவிட்டு, மூன்றாவது தவணை என்று கையால் எழுதினார். என்னை கையெழுத்து போடவும் சொன்னார். திடீரென்று எழுந்தார். ஒருமணி நேரத்தில் அவரே எல்லா செக்ஷன்களுக்கும் போய், இருபத்தெட்டராயிரம் ரூபாய்க்கு செக் வாங்கி வந்துவிட்டார். இது போதாதென்று இரண்டு தடவை ‘டீ வாங்கிக் கொடுத்தார். இந்த வடஇந்திய அலுவலர்களிடம் ஒரு பழக்கம். அதாவது, பைல்களைப் படிப்பதில்லை என்ற பழக்கம். அலுவலத்திற்கு காலை பதினோரு மணிக்கு முன்போ, மாலை நான்கு மணிக்கு பின்னரோ இருப்பதில்லை என்று ஒரு சபதம். ஆனால், நேரில் போய் விட்டாலோ, எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல், உடனடியாக உதவுவதும் அவர்களின் பண்பாடு.

3.

ஈரம் காயாத உள்ளம்

வீடு கட்டி முடித்துப் பால் காய்ச்சும் கட்டம் வந்தது.

குடிபுகு விழாவைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை அதேசமயம், உறவினர்களுக்குக் கொடுத்த வட்டியில்லாக் கடனை (அதாவது பரிசுப் பொருட்களை திருப்பி வசூலிக்காமல் விட மனமில்லை. ஆகையால் உறவினர்களுக்கென்றே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. அதே சமயம், மிகவும் நெருங்கிய பிரமுகர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்புக்கள் அனுப்பினேன். பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் குழுமினார்கள். தேறாத கேஸ் என்று கருதப்பட்ட நான், வீடு கட்டிவிட்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. மாமனார் முறுக்கோடு கோபித்துப்போய் திரும்பி வந்த என் மாமனாருக்கு இந்த மருமகனே பட்டு வேட்டி, பட்டு சட்டை வாங்கிக் கொடுத்தான். எல்லாவற்றிக்கும் மேலாக,

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்குகூட நேரம் இல்லாமல் அல்லாடும் தினத்தந்தி இயக்குநர் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் தனது மூத்த செய்தியாளர் சுகுமாரோடு, முட்டளவிற்கு தண்ணிர் தேங்கியிருந்த தெருவழியாக நடந்து, ஈரக்கால்களோடு என் வீட்டிற்கு வந்தது இன்னும் என் நெஞ்சில் ஈரம் காயாமல் உள்ளது.

குமுதம், 12-11-1987