பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


II

அம்மட்டோ! சமணமும், புத்தமும் யார் நிலைநாட்டிய கொள்கைகள்? “அவன‍ன்றி ஓரணுவும் அசைவதில்லை,” என்றால், அவற்றை நிலைநாட்டியவனும் நமது ஐயனேயாகும். பால் குடிக்கும் குழவி, சோறுண்டால் சாகும். சோறுண்ணும் குழவி பாலுண்டால், சவலை போகும். குழவியின் உடலுரத்திற்குத் தக்க உணவினைத் தாயானவள் அறிந்து, ஊட்டுவது போல, ஆண்டவனாம் இயற்கையன்னையும், அவ்வவருடைய உள்ள நிலைக்குத் தக்க கொள்கையினை அவ்வம்மக்களிடை பரப்புகின்றாள்.

“ஆயாதன சமயம்பல அறியாத அந்நெறியின்
தாயானவன்.”

என்கிறார் சம்பந்தர். எனவே, சமணத்தையும், சாக்கியத்தையும் ஆக்கியோனாய் விளங்குபவன் ஆண்டவனேயாம். புத்தரும், மகாவீர‍ரும் அந்த வகையில் இறைவன் வடிவினரேயாவர்; அவன் ஆட்ட ஆடியவராவர்; அவன் காட்டக் கண்டவராவர்.

“துணைநன்மலர் தூய்த்தொழுந் தொண்டர்காள் சொலீர்
பணைமென்முலைப் பார்ப்பதி யோடுட னாகி
இணையில்லிரும் பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண் சாக்கிய மாக்கிய வாறே.”

என வினவுகின்றார் சம்பந்தர். இறைவனே இவற்றை ஆக்கினான் என்பதில் ஒரு வினாவும் எழவில்லை. “இறைவன் இவற்றைப் படைத்தது