பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


பழிப்பான செயல்களின் மேல் சீறியே விழுதல் வேண்டும். பழியாளருக்கு இரங்குவது போலப் பழிக்கும் இரங்கினால் உலகம் என்னாகும்? ஆதலின் தீமையைச் செறுத்தல் வேண்டு்ம்.

செறுத்து வாது செயத் திருவுள்ளமே?

என்று சம்பந்தர் வேண்டுகின்றார். அவர்களின் பொய்த்திறங்கள், அவர்களுக்குப் பயன்படாது ஒழிய வேண்டும். செறுத்தலும் சீறுவதும் எதற்கு? அவர்களுடைய தீயொழுக்கம் சிதையவே அன்றோ? ஆதலின், அவர்களுடைய தீத் திறங்கள் சிதறவே வேண்டுகின்றார். ஈதும் அவர்கள் மேல் இருந்த அன்பே அன்றோ?

திறங்களைச் சிந்த வாது செயத் திருவுள்ளமே
திறம் கழல வாது செயத் திருவுள்ளமே.

எனவே சம்பந்தர் வேண்டுகின்றார். சமணர்களாகிய அவர்கள் சைவராகித் தம்மை வெல்லவோ இவர் விரும்புகி்ன்றார்; இல்லை. எதிருரையாடுகையில் அவர்கள் முறியடிக்கப்பட்டு, உரை குழறித் தோற்று ஓடி ஒளிந்து மனமழியத் தாம் அவர்களை வெல்ல வேண்டும் என்றே இவர் விரும்புகின்றனர்.

ஒட்டி வாது செயத் திருவுள்ளமே
சித்தரை அழிக்கத் திருவுள்ளமே
வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே
வாதினில் செண்டடித்துளறத் திருவுள்ளமே.

காக்கவாது செய்யத் திருவுள்ளமே
அழிப்பரை அழிக்கத் திருவுள்ளமே.